சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கடனை அடைக்க முடியாமல் அண்ணன் வீட்டுக்கு வந்த கண்ணன்.. மூர்த்தி கதிருக்கு இடையே ஏற்படும் விரிசல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. அதாவது பிரிந்திருந்த அண்ணன் தம்பிகள் மறுபடியும் கூட்டுக் குடும்பமாக ஒன்று சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கூடி வருகிறது. முதலில் ஐஸ்வர்யா கண்ணன் அவர்கள் தனியாக போய் இருந்து வாழ முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி பிரச்சினையில் சிக்கிய பொழுது கதிர் காப்பாற்றி உள்ளார்.

இந்த சூழலையில் ஜீவா மூர்த்தி உடன் சேர்ந்து கதிரை வெளியில் எடுக்கும் முயற்சியில் இருவருக்கும் இருந்த கோபம் குறைந்துவிட்டது. பின்பு கதிர் வெளியில் வந்த பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவை தவிர மற்றவர்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பொழுது சாப்பாட்டை மூர்த்தி உருண்டை பிடித்து அனைவருக்கும் கொடுத்ததை பார்க்கும் பொழுது கூட்டுக் குடும்பத்தில் உள்ள சந்தோசம் புரிகிறது.

Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

ஆனால் கதிருக்கு மட்டும் ஏதோ மனதில் ஒரு குறை இருந்தது போல் தோன்றியது. அதனால் மறுநாள் அண்ணன் மூர்த்தியிடம் எதுவும் சொல்லாமல் நேரடியாக கண்ணன் வீட்டிற்கு சென்று இனிமேலாவது கடன் வாங்காமல் வாங்குற சம்பளத்தை வைத்து வாழப் பழகிக்கோ என்று சொல்கிறார்.

அதற்கு கண்ணன் எனக்கு எப்படி வாழனும் தெரியவில்லை என்று சொன்னதும் கதிர் ரொம்பவே உடைந்து போய் நீங்க கிளம்பி வாங்க அங்கே போய் இருக்கலாம் என கூப்பிடுகிறார். அவர்களும் இதுதான் நல்ல சான்ஸ் நம்ம வேற இன்னும் கடன் வச்சிருக்கோம் தனியா இருந்தா நம்முடைய கெதி அவ்வளவுதான் நின்று நினைத்து கதிர் கூப்பிட்டதும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் பின்னாடியே போய் விட்டார்கள்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

பிறகு இதை பார்த்த தனம், மூர்த்தி மாமாக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று கேட்க அதற்கு கதிர் அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாங்க பாத்துக்கலாம் என்று சொல்லி வீட்டுக்குள் கூட்டிப் போய் விடுகிறார். பிறகு மூர்த்தி வீட்டுக்கு வருவதை பார்த்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ரூம்குள்ளே ஒளிந்து விடுகிறார்கள். ஆனால் தனம், கண்ணனை அழைத்து மூர்த்தியிடம் இவர்கள் இருவரும் வந்து விட்டார்கள் என்று சொல்கிறார்.

உடனே மூர்த்தி கோவப்பட்டு இவங்களால தான் கதிர் ஜெயிலுக்கு போனா மறந்து விட்டாயா என்று கேட்கிறார். அதற்கு தனம் இவர்களை கூப்பிட்டு வந்ததே கதிர் தான். உங்களுக்கு எப்படி தம்பிகளிடம் முடிவெடுக்க உரிமை இருக்குதோ, அதே மாதிரி கதிருக்கும் எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்கிறார். இதனால் மூர்த்திக்கும் கதிருக்கும் விரிசல் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் மூர்த்தி, கண்ணன் ஐஸ்வர்யாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள தான் போகிறார்.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

- Advertisement -

Trending News