செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூப்பர்ஸ்டாரை நம்பி மோசம் போன பிரபல நடிகை.. குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை வெறுத்த சம்பவம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களில் நடிக்க வேண்டுமென பல நடிகர், நடிகைகள் போட்டிப் போடுவது, சண்டை போடுவது என அனைத்தையும் செய்வார்கள். அந்த அளவுக்கு இவர் நடிக்கும் படத்தில் சிறு காட்சியில் தோன்றினால் கூட அந்த நடிகர்களின் வாழ்க்கை வசந்தமாகும் . மேலும் பின்னணி பட பணியாளர்களும், அவர் படத்தில் சிறு வேலை செய்தால் கூட அதிர்ஷ்டமாக கருதுவார்கள்.

அந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரின் மதிப்பு இந்திய சினிமாவில் உயர்ந்த ஒன்று. ஆனால் சூப்பர்ஸ்டாருடன் ஜோடிப் போட்டு நடித்த நடிகை ஒருவரின் வாழ்க்கையே காணாமல் போன விஷயத்தை செய்யார் பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டாருடன் எந்த நடிகைகள் நடித்தாலும் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள், கோடிக்கணக்கில் சம்பள உயர்வு என எல்லாமே கைகூடும்.

Also Read: சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத 5 டபுள் ஹீரோக்கள்.. கட்டப்பாவிற்கு ரஜினி மீது என்ன கோபம் என்றே தெரியல

இதன் காரணமாக சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துவிட்டால் எவ்வளவு பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும், அதை உதறித்தள்ளி விட்டு ரஜினியுடன் நடிக்க தயாராவார்கள். உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு வந்த பொன்னியின் செல்வன் பட வாய்ப்பையே உதறிவிட்டு ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்தார்.

அந்த படம் தோல்வியடைந்திருந்தாலும் பிறவி பலன் பெற்றது போல் கீர்த்தி சுரேஷ் உற்சாகமாக வலம் வருகிறார். அதே போல நடிகை ஸ்ரேயா ஷரனும் தெலுங்கிலும்,தமிழிலும் சரிவர வாய்ப்பு இல்லாத போது சூப்பர்ஸ்டாரின் சிவாஜி படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து புகழ் பெற்றார்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டம், கேரியர் முடிவு என ரஜினியை சுற்றி பின்னும் வளையம்.. ஆனா அவர் மனதில் வைத்திருக்கும் திட்டம

இதனிடையே சூப்பர்ஸ்டாரின் படத்தில் நடித்து தனது வாழ்க்கையையே பாலிவுட் நடிகை தொலைத்துள்ளார். ரஜினியின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாபா திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. இமயமலையில் இருக்கும் பாபா கடவுளின் சக்தியை பற்றி உணர்த்தும் வகையில் இப்படத்தின் கதை உருவானது. இதில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா இப்படத்தில் அவருக்கு காதலியாக வளம் வருவார்.

ஏற்கனவே இவர் அர்ஜூனுடன் முதல்வன், கமலுடன் இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழில் பரிட்சயமான நிலையில், பாபா படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் இப்படத்தின் தோல்வியால் தனது ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் மனிஷா கொய்ராலா இழந்தது மட்டுமின்றி குடிப்பழக்கத்துக்கும் ஆளானார். இன்றுவரை இவர் ஏன் இந்த படத்தில் கமிட்டானார் என புலம்பி வருவதாக அவரே வெளிப்படையாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Also Read: வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

Trending News