செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

50 வயசு ஆகியும் கல்யாணம் ஆகாத 6 நடிகைகள்.. ஜோதிகாவின் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை

பொதுவாகவே நமக்கு கிடைக்கிற மனைவி இந்த மாதிரியான அழகுடன் இருக்கணும் என்று நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து கனவு காண்போம். ஆனால் அந்த நடிகைகள் இன்னும் அவர்களுக்கு ஏற்ற மணமகன் அமையவில்லை என்று கல்யாணமே ஆகாமல் 50 வயசாகியும் சிங்கிளாகவே இருந்து வருகிறார்கள். அதிலும் சில நடிகைகள் திருமணம் என்றாலே எனக்கு செட்டாகாது என்று ஓடிப் போகும் அளவிற்கு வெறுத்து இருக்கிறார்கள். அந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

மும்தாஜ்: இவர் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மிகப் பிரபலமான நடிகையாக பெயர் பெற்றார். இவர் தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து அதிலும் நிறைய ஐட்டம் பாடலுக்கு ஆடி இருப்பார். 90ஸ் கிட்ஸ்க்கு ஃபேவரிட் நடிகையாக இருந்தார். பின்பு சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது இவருக்கு 42 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். அதற்கு காரணம் இவருடைய உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போவதால் திருமணத்தைப் பற்றி எந்தவித யோசனையும் வரவில்லையாம்.

சித்தாரா: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பலருக்கும் பரிச்சயமான நடிகையாக 80களில் வலம் வந்தவர் தான் சித்தாரா. இவர் தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்த வெற்றி நாயகியாக வாகை சூடி இருக்கிறார். ஆனால் தற்போது இவர் கன்னடா மற்றும் தெலுங்கு படங்களில் அம்மா கேரக்டருக்கு நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாகவே இருப்பது மிகவும் ஷாக்கிங் ஆக இருக்கிறது. அதற்குக் காரணம் இவருடைய இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி. அதனால் இவரால் வேற ஒரு கல்யாண வாழ்க்கைக்கு போக முடியவில்லை.

Also read: எந்த இலாக்காவையும் விட்டு வைக்காத டி ராஜேந்திரரின் 5 படங்கள்.. வீராச்சாமியாய் மும்தாஜ் உடன் செஞ்ச ரவுஸ்

கௌசல்யா: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களில் முன்னணி நடிகையாக நடித்திருக்கிறார். தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களின் நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்ததால் அதில் இறங்கி விட்டார். அதனால் என்னமோ இவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் போய்விட்டது. இனியும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற முடிவுடன் 43 வயதாகியும் சிங்கிளாக இருக்கிறார்.

தபு: இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பெயர் பெற்றார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக பரிச்சயமானார். அடுத்ததாக அஜித்திற்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்தது மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் ஹீரோயின் ஆகவும், பல படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அது கைகூடாமல் போனதனால் மனவேதனையில் 51 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Also read: கொடி கட்டி பறந்த 5 அக்கா, தங்கை நடிகைகள்.. நக்மாவை தூக்கி சாப்பிட்ட ஜோ

நக்மா: 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் நக்மா. அதிலும் இவர் நடித்த காதலன் பாட்ஷா பிஸ்தா போன்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆகி அந்த காலத்தில் உள்ள நடிகைகளுக்கு பெஸ்ட் உதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் இவர் ஒரு காதலுடன் இருந்ததாகவும் அது சில காரணங்களால் கைவிடப்பட்டது என்று பல சர்ச்சைகளில் இவருடைய பெயர் மிகவும் டேமேஜ் ஆகிவிட்டது. அதனால் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இவருடைய தங்கையான ஜோதிகாவின் குழந்தைகளுக்கு வளர்ப்பு தாயாக இருந்து வருகிறார்.

சோபனா: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வந்தார். அப்படிப்பட்ட இவர் 53 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இவருடைய ஆர்வம் அனைத்தும் பரதநாட்டியத்தில் அர்ப்பணித்து வருகிறார். ஆனாலும் தனக்கென்று குடும்பம் வேண்டும் என்ற காரணத்திற்காக கொஞ்சம் வருடங்களுக்கு முன்னதாக ஒரு குழந்தையை தத்தெடுத்து அவருடன் குடும்பமாய் வாழ்ந்து வருகிறார்.

Also read: நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்

Trending News