செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பயில்வான் ஒரு நரகாசுரன், செத்தால் பட்டாசு வெடிப்பேன்.. பச்சை பச்சையாக திட்டிய குடும்ப குத்து விளக்கு நடிகை

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், துணை கதாபாத்திரத்திலும் இடம் பெற்றவர் தான் பயில்வான். தற்பொழுது இவரின் செயலால், நடிகை ஒருவரால் கடுமையாக சாடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமா பயணத்திற்கு இடைவெளி விட்டு காணப்படும் பயில்வான் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் நடிகைகள் மற்றும் நடிகர்களின் அந்தரங்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார். இத்தகைய செயல் இவரின் வயதிற்கு இது தேவையா என்பதை கேட்பது போல அமைந்து வருகிறது.

Also Read: சிறுத்தை ராக்கெட் ராஜாவாக மாறிய கார்த்தி.. உண்மை சம்பவம், ஜப்பான் படத்தின் கதை இதுதான்

2022ல் பார்த்திபன் இயக்கி, நடித்த படமான இரவின் நிழலில் இடம்பெற்ற ரேகா நாயரை குறித்து சில செய்திகளை கூறி வீண்வம்பை விலைக்கு வாங்கினார் பயில்வான். இவரின் இத்தகைய செயலை பொறுக்க முடியாது ஒரு கடற்கரை சாலையில் நேரடியாக சண்டை போட்டு அவரை ரோட்டில் வைத்து அசிங்கப்படுத்தினார் ரேகா நாயர்.

மேலும் இவரை ஆண் என்ற போர்வையில் வாழும் பிணம், அதற்கு கூட மரியாதை கொடுக்கலாம், இவரை சும்மாவே விடமாட்டேன், கண்டிப்பாக அசிங்கப்படுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டி வருகிறார். சேனலின் மூலம் நியாயமான முறையில் நல்லதை சொல்லி சம்பாதிக்கலாம் அதற்கென்று தேவையில்லாதது மற்றும் செய்யாததை கூறி இப்படி எல்லாம் கூட பிழைப்பார்களா என்று கடுமையாக கொந்தளித்து வருகிறார் ரேகா.

Also Read: ஒன்றாக தங்கியிருந்த 5 நகைச்சுவை நடிகர்கள்.. கல்லாப்பெட்டி சிங்காரத்தை ஜொலிக்க வைத்த பாக்கியராஜ்

ஒவ்வொரு தீபாவளிக்கும் நரகாசுரன் இறந்ததற்கு பட்டாசை வெடித்து வருவோம். ஆனால் பயில்வான் போன்ற ஜந்துக்கள் இறந்தால் சந்தோஷத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வேன் எனவும் தன் ஆதங்கத்தை கொட்டி வருகிறார். பப்ளிசிட்டிக்காக இப்படி கூட வேலை பார்ப்பார்களா என்றும் தன் வயதுக்கு மீறி இவர் செய்து வரும் இத்தகைய மட்டமான வேலையை கண்டால் ஆத்திரம் வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரேகா நாயரின் இத்தகைய துணிச்சலான வாக்குவாதம் இவரால் பாதிக்கப்பட்ட பல நடிகர், நடிகைகளுக்கு ஆறுதலாகவும் இருந்து வருகிறது. இவரின் தைரியமான பேச்சிற்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் நானே ஒரு முன்னோடியாகவும் மற்றும் உதாரணமாகவும் இருக்க விரும்புகிறேன். இனி இதுபோன்று யாரும் பெண்களைப் பற்றி கிசு கிசுக்க கூடாது என்பதை தெளிவுபடுத்தியதாக கூறினார் ரேகா நாயர்.

Also Read: காதலித்த கணவரின் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சம் ஆகிய நடிகை.. இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது

Trending News