திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோவுக்கு எண்டு கார்டு, பூசணிக்காய் உடைக்கும் லோகேஷ்.. வேற லெவலில் வெளிவர உள்ள டீசர்

சினிமாவில் லோகேஷின் அனுபவம் மிகவும் குறைவு என்றாலும், அதன் மீது உள்ள காதல் மற்றும் ஆர்வத்தால் டஃப் நடிகர்களின் விருப்பமான இயக்குனராக மாறி உள்ளார். இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். அதுவும் இந்த படத்தில் மிகப்பெரிய திரை பட்டாளத்தையே கூட்டி இருக்கிறார்.

மேலும் லோகேஷ் தனது வேளையில் எப்போதுமே கவனமாகவும், உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அதனால் தான் துளி கூட பயப்படாமல் டைட்டில் வீடியோவில் ரிலீஸ் தேதியுடன் அறிவித்தார். மற்ற இயக்குனர்கள் என்றால் நினைத்த நேரத்தில் படத்தை எடுக்க முடியுமா என்ற பயம் ஏற்படும்.

Also Read : தளபதி 68 பட டைட்டில் இது தானா! தோனிக்காக விஜய் செய்த செயல்

லோகேஷை பொறுத்தவரையில் எதிலும் பின்வாங்க மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. அதன்படி ஜூன் 12-ம் தேதியுடன் லியோ படத்திற்கு எண்டு கார்டு போட்டு பூசணிக்காய் உடைக்க உள்ளார் லோகேஷ். அதாவது லியோ படத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே சண்டை காட்சிகள் பாக்கி இருக்கிறதாம்.

மேலும் இந்த கடைசி ஷெட்யூலில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கிறார்களாம். இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பின்னணி வேலைகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார். இதற்கு முன்னதாகவே லியோ படத்தின் டீசரை படு பயங்கரமாக ரெடி செய்துள்ளாராம்.

Also Read : விஜய் பட வில்லனை லாக் செய்த அஜித்.. சூடு பிடிக்கும் விடாமுயற்சி அப்டேட்

மேலும் டீசரை பார்த்த லியோ படக்குழு அசந்து விட்டனராம். ஏற்கனவே விக்ரம் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதிலும் ரோலக்ஸ் என்ட்ரி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவ்வாறு லியோ டீசரில் லோகேஷ் சில சஸ்பென்சுகளை உடைக்க வாய்ப்பு இருக்கிறது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 21ஆம் தேதி லியோ படத்தின் டீசர் மற்றும் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. இதனால் அன்று டபுள் ட்ரீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். லோகேஷ் கண்டிப்பாக திக்கு முக்காட செய்ய வைத்திடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : தற்கொலை செய்து கொண்ட விஜய் பட நடிகை.. கேவலமாக வீட்டில் திருடி சென்ற பிரபலங்கள்

Trending News