அஜித்தின் AK 62 படத்திற்கு “விடாமுயற்சி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார், இவர் முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகதலைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளார். நடிகர் அஜித்தின் பிறந்தநாள் விழாவில் இப்படத்தைப் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டன. இப்படத்திற்கு அனிரூத் இசை யமைக்கிறார் விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் “Efforts never fail” முயற்சிகள் தோல்வியடையாது” என்று வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார் அஜித்துடன் 5வது முறையாக ஜோடி சேரும் இப்படத்தில், அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மே இறுதியில் படப்பிடிப்பு தொடங்ப்படும் என்று செய்திகள் வெளியாகின.
அர்ஜுன் தாஸ் சைட் வில்லனாக இருந்தாலும் இன்னும் படக்குழு முக்கியமான வில்லன் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அஜித் தற்போது தனது கெட்டப்பை மாற்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அவர் தொடங்கி வைத்த பைக் சுற்றுலா பிசினஸ் அமோகமாக போய்க்கொண்டிருப்பதாகவும் நாளை சினிமாவில் பிரேக் எடுத்துவிட்டு இதை கவனிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் அதிகபட்ஜெட்டில் எடுக்கப்படும் சிறந்த ஆக்ஷன் எண்டெர்டெயினர் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் வெளியான அஜித்தின் துணிவு படம் 300 கோடி ரூபாயிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.