ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

இயக்குனர் சொன்னதை கேட்டு லண்டன் சென்ற அஜித்.. ஆளையே மாற்றும் மகிழ்திருமேனி

அஜித் துணிவு என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் உடனடியாகவே தனது அடுத்த பட வேளையில் இறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விடாமுயற்சி படம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. வாரிசுக்கு பிறகு விஜய் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார்.

ஆனால் விடாமுயற்சி படம் இன்னும் தொடங்கவே இல்லை. இவ்வாறு படப்பிடிப்பு ஒவ்வொரு முறையும் தாமதமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பட வேலைகளை விடாமுயற்சி படக்குழு தொடங்கி உள்ளது. இதற்காக பூனே அருகே பிரம்மாண்ட செட் போட்டு வருகிறார்களாம்.

Also Read : விஜய்யை விட அஜித்துக்கு ஜோடியாக நடித்ததால் வந்த புகழ்.. வீட்டிற்கு அதே பெயரை வைத்து அழகு பார்த்த நடிகை

இந்நிலையில் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்தை லண்டன் வர சொல்லி இருந்தாராம். அதன்படி அஜித்தும் லண்டன் சென்று இருக்கிறார். எதற்காக இப்போது திடீர் லண்டன் பயணம் என்றால் அங்கு அஜித்துக்கு லுக் டெஸ்ட் எடுக்கிறார்களாம்.

அதாவது விடாமுயற்சி படத்திற்காக அஜித்துக்கு வித்தியாசமான லுக் அமைத்து போட்டோ சூட் எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை எந்த படத்திலும் அஜித் இல்லாதவாறு ஆளையே மாற்றும் அளவிற்கு மகிழ்திருமேனி நியூ லுக்கில் அஜித்தை காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Also Read : டாக்டர் பணியை விட்டுவிட்டு அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர்.. சாய் பல்லவியை போல இருக்கும் மருத்துவர்

ஆகையால் விரைவில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜூன் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு கேரக்டர்களில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.

எனவே இரண்டு வேறு விதமான லுக்கில் அஜித் இருக்கப் போகிறார். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் கூட அஜித் ஹீரோ, வில்லன் என மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக விடாமுயற்சி படம் இருக்க உள்ளது.

Also Read : அஜித்தை பாடாய்படுத்தும் விடா முயற்சி.. ரஜினி படத்திற்கும் அதே கதி தானா?

Trending News