தியேட்டர் ஓனர்களை காலை வாரிவிட்ட ஹிப்ஹாப் ஆதி.. நம்பி மோசம் போயிட்டோம் என புலம்பல்

ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக சில காலமாக படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவருடைய பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல படத்திற்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வீரன் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

சரவணன் இயக்கத்தில் ஆதிரா, சசி, வினய், முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பல பிரபலங்கள் வீரன் படத்தில் நடித்திருந்தனர். போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. பொதுவாக சூப்பர் ஹீரோ படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரும்.

ஆகையால் வீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. மலையாளத்தில் மின்னல் முரளி என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தின் சாயலில் சில மாற்றங்கள் செய்து வீரன் படத்தை இயக்குனர் சரவணன் இயக்கி இருந்தார்.

அதாவது கதாநாயகன் ஆன ஹிப் ஹாப் ஆதியை மின்னல் தாக்கியதால் அவரது உடம்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதன் மூலம் தனது கிராம மக்களை ஆபத்திலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் வீரன் படத்தின் கதை. மின்னல் முரளி படம் வசூலை வாரி குவித்ததால் இந்த படமும் நல்ல லாபத்தை பெறும் என விநியோகஸ்தர்கள் நம்பி இருந்தனர்.

இதனால் கிட்டதட்ட 8 கோடி கொடுத்து வீரன் படத்தை வாங்கி இருந்தனர். ஆனால் தியேட்டரில் ஈ ஓட்ட கூட ஆள் இல்லையாம். அந்த அளவுக்கு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் படத்திற்கு மோசமான விமர்சனம் கிடைத்து வருகிறது. தியேட்டர் ஓனர்களும் இதனால் நஷ்டம் அடைந்துள்ளனர்.

விநியோகஸ்தர்களுக்கு எப்படியும் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடு கட்டி விடுவார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு தான் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியை நம்பி இறங்கிய இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது. இப்படி நம்பி மோசம் போய் விட்டோமே என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.