புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஷங்கர் பட வாய்ப்பு நழுவ விட்ட மதுரை முத்து.. டாப் ஹீரோவுக்கு டஃப் கொடுத்த கதாபாத்திரம்

Director Shankar: இவர் படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இல்லை என கூறும் அளவிற்கு பல பிரபலங்களை வைத்து இவர் மேற்கொண்ட படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. அவ்வாறு இருக்க இவர் படத்தை நிராகரித்த நடிகர் ஒருவரை பற்றி இக்குறிப்பில் காணலாம்.

2012ல் ஷங்கர் இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி வெற்றி கண்ட படம் தான் நண்பன். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நல்ல விமர்சனங்களை பெற்று பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் மதுரை முத்து விஜய்யின் எனிமி கதாபாத்திரத்தை ஏற்பதாக இருந்ததாம்.

Also Read: லியோ வியாபாரத்தை துவம்சம் செய்த ஜெயிலர்.. எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்த ரஜினி

விஜய் டிவியில் ஸ்டாண்டர்ட் காமெடியனாக வலம் வருபவர்தான் மதுரை முத்து. இவரின் மொக்கை காமெடிகள் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். ஆனால் இவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் சினிமாவில் ஒரு சில வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அவ்வாறு இருக்க விஜய்யை பொறுத்தவரை நண்பன் திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. மேலும் படத்தில் ஜீவாவிற்கு பதிலாக சிம்பு நடிப்பதாக இருந்ததாம் ஆனால் சிம்பு ஏற்காததால் ஜீவா நடித்தாராம். அதேபோன்று சத்தியன் கதாபாத்திரம் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: ஒரே நாளை குறிவைத்து வர போகும் 3 அப்டேட்டுகள்.. கோடம்பாக்கம் முதல் கோட்டை வரை தெறிக்கவிடும் தளபதி

அக்கதாபாத்திரத்திற்கு ஷங்கர் முழுக்க முழுக்க மதுரை முத்து தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்த நிலையில், அவற்றை ஏற்கும் சூழ்நிலையில் மதுரை முத்து இல்லாததால் சத்தியன் இப்படத்தில் இடம் பெற்றாராம். இத்தகைய நிகழ்வை தற்பொழுது பேட்டி ஒன்றில் பகிர்ந்து வருகிறார் மதுரை முத்து.

மேலும் இவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போய்விட்டது. ஆகையால் தான் என்னவோ தற்பொழுது வரை டிவியில் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.

Also Read: 30 வயது வித்தியாசம் உள்ள நடிகையை திருமணம் செய்த பாலு மகேந்திரா.. கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போன பத்தினி

Trending News