வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கடைசியாக இறந்த மாதிரி நடித்து, உண்மையிலேயே உயிர் விட்ட பிரபலங்கள்..

Actor Sarath Babu: படத்தில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் கதைக்கு திருப்புமுனையாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு படத்தில் இறக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பின்பு உண்மையில் மரணத்தை சம்பவித்த நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

மேலும் ஒரு சில நடிகர்கள் சென்டிமென்ட் ஆகவே இது போன்ற கதாபாத்திரங்களை தவிர்த்து விடுவார்கள். அவ்வாறு விருப்பம் இல்லாமல் ஏற்று நடித்த பின்பு அதுவே அவர்களுக்கு கடைசி படமாகவும் மாறியது உண்டு.

Also Read: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கேடு கெட்ட சகவாசத்தால் உயிரிழந்த பிரபல டிவி நடிகை.. சாவிற்கு காரணமான 5 பேர்

சிவாஜி கணேசன்- படையப்பா: 1999ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பூப்பறிக்க வருகிறோம் மற்றும் படையப்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக படையப்பா படத்தில் சிவாஜி தன் வீட்டை துறந்த துக்கத்தில் இறப்பது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அதன்பின் எந்த படங்களில் நடிக்காத இவர் 2001ல் மண்ணுலகத்தை விட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுவரன்- யாரடி நீ மோகினி: பல வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ்ற்கு பொறுப்பான அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் தூக்கத்திலேயே இறந்தது போன்ற காட்சியில் இடம் பெற்ற இவர் இப்படம் வெளிவருவதற்கு முன்பே மார்ச் 2008ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போர் தொழிலை ஓரம் கட்டிய சித்தார்த்தின் டக்கர்.. ஷாக்கான முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

சரத் பாபு- போர் தொழில்: ரஜினியின் நண்பனை போன்று பல சப்போட்டிங் ரோலில் நடித்தவர் சரத்பாபு. இந்நிலையில் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த போர் தொழில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்ற சரத்பாபு அப்படத்தில் இறக்கும் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் அப்படம் வெளி வருவதற்கு முன்பே இவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதா-சுபாஷ்: 1996ல் அர்ஜுன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று நடித்த படம் தான் சுபாஷ். இப்படத்தில் அர்ஜுனோடு சில்க் ஸ்மிதா ஒரு ஐட்டம் டான்சில் இடம் பெற்றிருப்பார். ஆனால் இவருக்கு இப்படமே கடைசி படமாக மாறிவிட்டது. அதே ஆண்டு 23 செப்டம்பர் மாதம் இவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: குணசேகரனின் 40% சொத்து சுக்கு நூறாக போன பரிதாபம்.. ஜனனியை ஆட்டிப் படைக்க போகும் ஜீவானந்தம்

அருண் அலெக்ஸாண்டர்-மாஸ்டர்: சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் ஆகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தமிழ் சினிமாவில் இடம் பெற்றவர் அருண் அலெக்சாண்டர். விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இறக்கும் காட்சியை ஏற்ற இவர் உண்மையில் இப்படம் வெளிவருவதற்கு முன்பே 2020ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News