பேய் கதை கைவிட்டதால் ஆக்சன் கதையை கையில் எடுத்த சுந்தர் சி .. எப்படி இருக்கு தலைநகரம் 2 ட்ரெய்லர்

Sundar C: கலகலப்பான மசாலா திரைப்படங்களுக்கு பெயர் போனவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இவருடைய படங்கள் என்றாலே பெரும்பாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தான் இருக்கும். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர். இதனாலேயே இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

இயக்குனராக வெற்றியடைந்த சுந்தர் சி கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அவருடைய திரைக்கதை பாணிக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு முழுக்க ஆக்சன் திரைப்படமான இதில் நடித்தும் பெரிய அளவில் வெற்றியடைந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார்.

நடித்த படங்களும் கை கொடுக்காத நேரத்தில் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டாகி கொண்டிருந்தது. சுந்தர் சி யும் திகில் மற்றும் நகைச்சுவை நிறைந்த அரண்மனை படத்தை இயக்கிய வெற்றி அடைந்தார். அதன் பின்னர் அவர் எடுத்த பேய் சீரிஸ் படங்கள் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் மசாலா படங்களுக்கு திரும்பிய இவருக்கு தோல்விதான் கிடைத்தது.

இப்போது சுந்தர் சி தன்னுடைய வெற்றிப்படமான தலைநகரத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ட்ரெய்லரும் வெளியாகி மிரட்டி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன், ரத்தம், கொலை என டிரைலர் முழுக்க அதிரடியை காட்டி இருக்கிறது படக்குழு. ‘ரைட் இஸ் பேக்’ என்னும் பயங்கர பில்டப்புடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.

மீண்டும் ஃபார்முக்கு வர போராடும் ரவுடி ரைட்டாக சுந்தர்சியில் நடித்திருக்கிறார். வன்முறை, ஒரு நடிகையின் திடீர் மாயம் என இந்த கதை நகர்வது போல் டிரைலரில் காட்டப்பட்டிருக்கிறது. தலைநகரம் 2 என்றதும் மீண்டும் நாய் சேகரின் காமெடி காட்சிகள் இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு வேலை இனிவரும் அப்டேட்டுகளில் அது பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது. 

தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில் போலீசார் சுந்தர் சி யை சுட்டுக் கொள்வது போல் முடிக்கப்பட்டு இருக்கும். எனவே இந்த இரண்டாம் பாகம் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. முகவரி, நேபாளி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் படம் பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.