நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது குஜாலாக போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் காமெடி கேரக்டரில் கோபி பண்ணும் அலப்பறையை பார்க்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறது. அதாவது கோபியை பார்க்கும் பொழுது கூழுக்கும் ஆசை மீசையில் மண்ணும் ஓட்டக்கூடாது. ராதிகா தான் வேணும் என்று போன கோபி தற்போது பாக்கியா எப்படி போனா இவருக்கு என்ன.

பாக்கியா பழனிச்சாமிக்கு தான் நிச்சயதார்த்தம் நடக்கிறது என்று இவர் ஏன் இந்த அளவுக்கு பரிதவிக்கணும். ஒரு வேலை அப்படியே நடந்தால் கூட இவருக்கு என்ன. அப்படி என்றால் ராதிகாவும் வேணும் பாக்கியமும் வேணும். இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் பண்ண கோபியை ராதிகா அவருடைய தோழியின் நிச்சயதார்த்தத்திற்கு கூட்டிட்டு போய் விடுகிறார்.

இதற்கிடையில் பழனிச்சாமியை பார்ப்பதற்காக பெண் வீட்டார்கள் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பிறகு பழனிச்சாமி மற்றும் அவருடைய அம்மாவும் வருகிறார்கள். ஆனால் பழனிச்சாமி மட்டும் வெட்கப்பட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். பிறகு எழில் இவரை மாப்பிள்ளையை அழைத்து வருவது போல் வீட்டிற்குள் கூட்டி வருகிறார்.

அடுத்ததாக அந்தப் பெண்ணை பார்த்து பழனிச்சாமி ரொம்பவே வெட்கப்பட்டு பார்க்கிறார். அடுத்து பழனிச்சாமி இடம் தனியாக பேச வேண்டுமென்று சொல்கிறார். இதனால் இவர்கள் மாடியில் பேசிக் கொள்ளப் போகிறார்கள். அங்கேயும் போய் பழனிச்சாமி வெட்கத்தில் முகம் சிவக்கும் படி இருக்கிறார். பிறகு ஒருவரை ஒருவர் பேச ஆரம்பித்த பின் அந்தப் பெண் நிறைய படித்திருப்பதாக சொல்கிறார்.

அதற்குப்பின் பழனிச்சாமிடம் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு நான் பள்ளிக்கூடம் பக்கமே போகவில்லை என்று கூறுகிறார். ஆனாலும் அந்த பெண்ணை பார்ப்பதற்கு ஓகே சொல்லுவார் என்று எண்ணம் தான் தோன்றுகிறது. இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா பழனிச்சாமி நிச்சயதார்த்தம் நடக்கிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பின் இனியாவிற்கு ஃபோன் பண்ணி அங்கே என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார். அவரும் பழனிச்சாமி அங்கிளுக்கு பெண்ணை ரொம்ப பிடித்து விட்டது. அதனால் அவர்கள் இருவரும் மாடியில் போய் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி நான் மட்டும் வீட்டில் இருந்தால் இந்த நிச்சயத்தை தடுத்து இருப்பேன் என்று ஆவேசப்படுகிறார்.