வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முல்லைக்கு குழந்தையை தாரவாத்து கொடுக்கும் தனம்.. கண்கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனம் வருடும் வகையில் காட்சிகள் ஒவ்வொன்றும் வருகிறது. அதாவது கதிர், முல்லையே செக்கப்புக்கு அழைத்துப் போகும் வழியில் விபத்து ஏற்படுகிறது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கதிர் எப்படியாவது என் மனைவியையும் குழந்தையும் காப்பாற்றி விடுங்கள் என்று மருத்துவரிடம் கெஞ்சுகிறார்.

பிறகு கதிர், ஜீவாக்கு போன் பண்ணி முல்லைக்கு நடந்த விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான ஜீவா மீனாவிடம் சொல்வதற்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது பக்கத்தில் இருந்த தனமும் கேட்டு பதற்றத்தில் அதிர்ச்சி அடைகிறார்.

Also read: நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

அடுத்து ஜீவா ஆஸ்பத்திரிக்கு வந்து கதிருக்கு ஆறுதலாக இருக்கிறார். அப்பொழுது இவரை பார்த்த கதிர் ரொம்பவே மனமடைந்து முல்லையை நினைத்து அழுகிறார். அந்த நேரத்தில் மூர்த்தி, தனம் மற்றும் மீனா வருகிறார்கள். பிறகு கதிரிடம் முல்லைக்கு என்னாச்சு எப்படி நடந்துச்சு என்று மூர்த்தி கேட்கிறார்.

இதனை அடுத்து முல்லையே நினைத்து ரொம்ப பீல் பண்ணும் கதிருக்கு கடைசியில் டாக்டர்கள் சொல்லும் பதில் உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் உங்கள் குழந்தையை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லப் போகிறார்கள்.

Also read: நாலா பக்கமும் ஜனனிக்கு வரும் பிரச்சனை.. சொத்துலையும், கல்யாணத்திலும் அடி வாங்கிய குணசேகரன்

இதை கேட்ட தனத்துக்கு அதிர்ச்சியில் வயிறு வலி வரப்போகிறது. அடுத்ததாக அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும். அந்த குழந்தையை இவர்கள் தாரவாத்து முல்லை இடம் கொடுக்கப் போகிறார்கள். இது கதிர்க்கு மட்டும் தெரிந்த உண்மையாகவும் கடைசி வரை முல்லை இடம் சொல்லாமல் மறைக்கப் போகிறார்கள்.

ஆனாலும் முல்லை கண்விழித்துப் பார்க்கும் பொழுது தனத்தின் குழந்தைக்கு தான் பிரச்சனை என்று தெரிந்தால் நம்புவாரா. அல்லது முல்லை இடம் கதிர் உண்மையை சொல்லப் போகிறாரா என்பது தான் விறுவிறுப்பான திருப்பங்களுடன் வரப்போகிற எபிசோடுகள் செண்டிமெண்டாக அமையப் போகிறது.

Also read: பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாகவும் ஐஸ்வர்யா.. ருசி கண்ட பூனையாகும் கண்ணன்

- Advertisement -

Trending News