திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

D50 படத்திற்கு கொழுக்கு மொழுக்கு நடிகையை லாக் செய்த தனுஷ்.. திரிஷா, கங்கனாவை ஓரம் கட்டிய ஹீரோயின்

Actor Dhanush: இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவருடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இது வரலாற்று படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு யார் கதாநாயகி என்ற உறுதியான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதற்கான ஒரு சில போட்டோஸ்கள் வெளி வருகின்றன. அதில் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். ஆனால் அது உண்மையா என்று தெரியவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் அறிவித்துவிட்டார்.

Also Read: D 50-க்காக உருமாறும் கேப்டன் மில்லர்.. தனுஷுடன் கைகோர்க்கும் 2 டாப் ஹீரோக்கள்

ஆனால் ஹீரோயினை மட்டும் மாற்றி கொண்டே இருக்கிறார். முதலில் கங்கனாவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தனர். அடுத்து திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போது இவரும் இல்லாமல் தற்போது கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும் நடிகையை லாக் செய்திருக்கின்றனர். சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் கதாநாயகியான நடித்த மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கின்றனர்.

இதில் தனுஷ் மற்றும் அபர்ணா பாலமுரளியுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஸ்ரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

Also Read: விஜய் சேதுபதி பண வரவை நிறுத்திய எஸ் ஜே சூர்யா.. அடுத்தடுத்து வந்த வாய்ப்பை பறித்து சவால் விடும் 5 படங்கள்

மேலும் இந்த படத்திற்காக சென்னையில் உள்ள ஈசிஆரில் 500 வீடுகள் இருப்பது போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. D50 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் துவங்க போகிறது.

இந்த படத்திற்காக தனுஷ் வித்தியாசமான ஹேர் ஸ்டைலை வைக்க இருப்பதாகவும், 90 நாளில் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே கேப்டன் மில்லர் படத்தை மிஞ்சிய எதிர்பார்ப்பை D50 திரைப்படம், கடந்த சில நாட்களாக ரசிகர்களிடம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

Also Read: தனுசுக்கு போன பட வாய்ப்பை தட்டி தூக்கிய கவின்.. பாராட்டியவருக்கே அடித்த விபூதி

Trending News