புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

20 ஆயிரம் கடன் கொடுக்க முடியல இப்ப 100 கோடி வருமானம்.. வியக்க வைத்த எம்.எஸ்.வி மகளின் பிசினஸ்

Music Director: கிங் ஆப் லைட் மியூசிக் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தான் எம் எஸ் விஸ்வநாதன். இவரின் மகளான இவர் என வியக்கும் அளவிற்கு சாதனை நாயகியாய் மாறி உள்ள இவரைப் பற்றி சிறு தகவலை இங்கு காணலாம்.

90ஸ் காலகட்டத்தில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த பெருமையை பெற்றவர் எம் எஸ் வி. இவர் தன் இசை அமைத்த பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இசைமழையில் நனைக்க வைத்தவர். அவ்வாறு இருக்க இவரை மிஞ்சும் அளவிற்கு சாதனை படைத்துள்ளார் இவரின் மகள் லதா மோகன்.

Also Read: காதல் மன்னனின் நிறைவேறாத ஆசை.. கனவுக்கு உயிர் கொடுத்த ஜெமினியின் குடும்பம்

எம் எஸ் வி சினிமா மூலம் புகழ் அடைந்தாலும், லதா சினிமா சம்பந்தப்பட்ட ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இருக்க அந்த காலகட்டத்தில் தானே முன்வந்து முயற்சித்த தொழில் தான் அழகுகலை. 1981ல் முதன் முதலில் சென்னையில் பியூட்டி பார்லர் தொடங்கிய நபர் இவர் தான் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

ஒரு பெண்ணாய் இத்தொழிலை தொடங்க சுமார் 20,000 ரூபாய் கடனாக வாங்கி அதன்பின் கடையை வைத்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் இதைப் பற்றி எதுவும் தெரியாமல் மக்கள் கடை பக்கமே வராமல் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் விடாமுயற்சியால் கடனுடன் ஒரு லட்சம் முதலீட்டில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Also Read: கவிஞரை செருப்பால் அடித்த எம்ஜிஆர்.. பழகிய பாவத்திற்கு இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துவது ?

தற்பொழுது ஸ்பலான் இண்டிகா பிரைவேட் லிமிடெட், பவுன்ஸ் யூனிஸ்டிக் சலூன் மற்றும் ஒரிசா என்ற மூன்று நிறுவனங்களையும் இந்தியா முழுக்க 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து இவரின் நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

அதிலும் வருடத்திற்கு 100 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் அளவிற்கு இவர் தன்னை நிரூபித்துள்ளார். இவ்வாறு சென்னையில் முதன் முதலில் தொடங்கிய தொழில் மூலம் பெருமையை பெற்ற இவர் தன் பியூட்டி பார்லருக்கு சினிமா செலிபிரிட்டிகளை கஸ்டமர் ஆக கொண்டு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

Also Read: கவுண்டமணியை பார்த்து அரண்டு போன கமல்.. சுத்தமா பிடிக்காமல் போவதற்கு இது தான் காரணம்

Trending News