Movie Leo: நாளுக்கு நாள் சஸ்பென்சை கூட்டும் விதமாக விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படத்தின் அப்டேட் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கடைசி கட்ட படப்பிடிப்பில் ஏற்பட்டு வரும் ட்விஸ்ட், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வாரிசு பட வெற்றிக்கு பிறகு பிரம்மாண்டத்தின் உச்சமாய் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து இயக்கும் படம் தான் லியோ. சமீப காலமாக இதன் அப்டேட்க்கு கிடைக்கும் வரவேற்பே வேற லெவலில் இருந்து வருகிறது. இப்படம் விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் படமாக அமைய உள்ளது.
இப்படத்தின் கூடுதல் சிறப்பாக த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்பை முன்வைக்கும் விதமாக இப்படத்தின் கடைசி மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அதுவும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக படம் பிடிக்கப்படும் இந்த சூட்டிங்- இன் அப்டேட் ஆக புது நடிகை இடம்பெற உள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மலையாள படத்தில் அறிமுகமான நடிகை ஆன மடோனா செபாஸ்டின் இப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பா பாண்டி, கவண் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதன்பின் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த இவர் தற்பொழுது லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளாராம்.
லியோ படத்தில் இணைந்திருக்கும் மடோனா செபாஸ்டின்

ஃப்ளாஷ் பேக் காட்சிக்கு என்று முக்கியத்துவம் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்பொழுது இவரை இப்படத்தில் நடிக்க வைத்து வருகிறாராம். பல அப்டேட்டுகளோடு மடோனா செபாஸ்டின் புகைப்படம் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.