திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோவுக்கு நிகராக தனித்து நின்ற நயன்தாரா.. அலறவிட்ட 5 படங்களின் வசூல் விவரம்

Actress Nayanthara: நடிகை நயன்தாரா தென்னிந்திய நடிகைகளின் முதன்மையானவராக இன்று வரை இருந்து வருகிறார். வசீகரமான தோற்றம், அழகு என்பதை தாண்டி நடிகைகளும், டாப் ஹீரோக்களுக்கு இணையாக தனியாக நடித்து வெற்றி பெறலாம் என்ற தைரியத்தை இன்று பல நடிகைகளுக்கு கொடுத்தது நயன்தாரா என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு தயக்கமும் இன்றி தனி கதாநாயகியாக நடித்து இந்த ஐந்து படங்களில் நயன்தாரா கோடி கணக்கில் வசூலையும் அள்ளி இருக்கிறார்.

கோலமாவு கோகிலா: இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாராவுக்கும், யோகி பாபுவுக்கும் இடையே வரும் டூயட் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான பெண்களை மையமாக வைத்து வெளியான படங்களில் இந்த படம் தான் அதிக அளவு வசூல் செய்தது. இந்த படம் 11 கோடி வசூல் செய்ததோடு, 400 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

Also Read:நடிப்புக்கு குட் பை சொன்ன விஜய் பட ஹீரோயின்.. நயன்தாரா இவங்கள பார்த்து கத்துக்கோங்க

இமைக்கா நொடிகள் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனி கதாநாயகியாக மட்டுமில்லாமல், அதிரடி ஆக்சனிலும் கணக்கிய திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். உலக அளவில் இமைக்கா நொடிகள் திரைப்படம் 25 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மூக்குத்தி அம்மன் : ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். வழக்கமான ஆன்மீக கதைகளாக இல்லாமல் இந்த படம் வித்தியாசமான திரைக்கதையை கொண்டிருந்தது. மேலும் இந்த படத்தை ரொம்பவும் தைரியமாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தார்கள். 8 முதல் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 30 முதல் 35 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Also Read:எப்படியோ ஒரு வருடத்தை கழித்த விக்கி-நயன் ஜோடி.. இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்

அறம்: நடிகை நயன்தாரா ரொம்பவும் தைரியமாக அரசியல் சார்ந்த பிரச்சனையை பேசிய திரைப்படம் அறம். இந்த படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. லோ பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 8 முதல் 10 கோடி வரை வசூலித்தது.

மாயா: இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முதன் முதலில் தனி கதாநாயகியாக நடித்த திரைப்படம் மாயா. முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் திரைப்படம் இது. பத்து கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் 30 கோடி வசூல் செய்தது.

Also Read:பிகில் படம் போல அடுத்த ஸ்போர்ட்ஸ் கதையுடன் ரெடியான விக்னேஷ் சிவன்.. கூட்டு சேரும் நயன்தாரா

Trending News