சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

2023 இல் முதல் படத்திலே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. கவினை தூக்கிவிட்ட டாடா பட கணேஷ்

பொதுவாக அறிமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே வெற்றி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல படங்கள் வெளியான நிலையில் 5 அறிமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே சாதித்து காட்டியுள்ளனர். அவர்களின் படங்களை இப்போது பார்க்கலாம்.

போர் தொழில் : சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் போர் தொழில். தமிழ் சினிமாவில் பல சீரியல் கில்லர் படம் வந்திருந்தாலும் வித்தியாசமாக இப்படத்தை எடுத்திருந்தார் விக்னேஷ் ராஜா. போலீஸ் அதிகாரியாக சரத்குமாரின் தேடுதல் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

Also Read : சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

யாத்திசை : அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான திரைப்படம் யாத்திசை. இப்படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்திருந்தனர். யாத்திசை படம் விவசாயிகள், அதிகாரத்தை அடைய நினைக்கும் பேரரசுக்கு எதிராக போராடும் படமாக எடுக்கப்பட்டிருந்தது. சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

குட் நைட் : விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் குட் நைட். இப்படத்தில் குறட்டையை மையமாக வைத்து அழகான படத்தை கொடுத்திருந்தார் விநாயக். காதல், சண்டை என அனைத்து உணர்வு பூர்வமான விஷயங்களையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read : நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

அயோத்தி : சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் அயோத்தி. அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். மதத்தை தாண்டி மனிதத்தை போற்றும் படமாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருந்தார். அரசியல் தலைவர் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

டாடா : கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா. காதல் ஜோடிகள் திருமணத்தில் இணையும்போது என்னென்ன பிரச்சனை சந்திக்கிறார்கள் என்பதையும் மகன், தந்தை பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்திருந்தனர். டாடா படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read : சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

Trending News