Actor ajith: ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் போன்ற பல வகைகளில் திரைப்படங்கள் வந்தாலும் செண்டிமென்ட் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுத்து விடுவார்கள். அப்படி அப்பா சென்டிமென்ட்டை மையப்படுத்தி தந்தைகளை பெருமைப்படுத்திய ஐந்து படங்கள் என்ன என்பதை இங்கு காண்போம்.
அபியும் நானும்: ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் அபியும் நானும். இதில் பிரகாஷ்ராஜ், திரிஷாவுக்கு அப்பாவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் மகள் கதாபாத்திரமான அபி, பிறந்ததிலிருந்து திருமணம் ஆகி செல்லும் வரை காட்டப்பட்டிருக்கும். அந்த வகையில் தன் மகளை தேவதையாய் கொண்டாடும் பிரகாஷ் ராஜ் திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருக்கு சொந்தமாகும் மகளின் பிரிவை தாங்க முடியாத காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார்.
Also read: 5 டாப் நடிகர்களுக்கு ரெட் கார்ட்.. சேட்டையை ஓரம் கட்டினாலும் சிம்புவை விடாமல் துரத்தும் பிரச்சனை
டாடா: கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் ஹீரோயின் சில காரணங்களால் குழந்தையை தனியே விட்டுவிட்டு சென்று விடுவார். அப்போது கவின் தன் குழந்தைக்கு தாய், தந்தையாக இருந்து வளர்ப்பார். அத்தகைய காட்சியில் ஒரு அப்பாவாக அவரின் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தெறி: அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் மீனாவின் மகள் நைனிகா அவர்களுக்கு மகளாக நடித்திருப்பார். அதிலும் சமந்தா இறந்த பிறகு தன் மகளுக்காகவே வாழும் விஜய் தன் அடையாளத்தை கூட மறைத்து விடுவார். இப்படி ஆக்சன், செண்டிமெண்ட் கலந்து வெளிவந்த இப்படத்தில் விஜய் நைனிகாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.
Also read: அழகாக காட்டிக்கொள்ள மூக்கு, உதடு அறுவை சிகிச்சை செய்த 5 நடிகைகள்.. மெய்சிலிர்க்க வைத்த நந்தினி
தெய்வத்திருமகள்: ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. இதில் விக்ரமின் மகளாக சாரா நடித்திருப்பார். அதிலும் மூளை வளர்ச்சி இல்லாதவராக இருக்கும் விக்ரம் தன் மகளுக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் பார்ப்பவர்களை கலங்க வைக்கும். அந்த வகையில் அப்பா மகள் உறவை வேறொரு கோணத்தில் இப்படம் காட்டியிருக்கும்.
விஸ்வாசம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருப்பார். குடும்பத்தை பிரிந்து வாழும் தூக்கு துரையாக வரும் அஜித் தன் மகளின் பாசத்திற்காக ஏங்குவதும், அவருக்கான ஆபத்தை தடுக்க போராடுவதுமாக அசத்தியிருப்பார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகள் அப்பா என்று கூப்பிடும் போது உணர்ச்சி பூர்வமாக தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை எல்லாம் அஜித் கலங்கடித்து இருப்பார்.
Also read: லைக்கா தலைமையில் மகிழ்திருமேனியை முடிக்கிவிட்ட அஜித்.. ஐ டி ரைட் ஆல் கதி கலங்கும் விடாமுயற்சி
இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் அம்மா சென்டிமென்ட் படங்களுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவுக்கு இந்த படங்களுக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.