புஸ்ஸுன்னு போன பிரபாஸின் எதிர்பார்ப்பு.. போட்ட காசை கூட எடுக்க முடியாமல் திணறும் ஆதிபுருஷின் 3வது நாள் கலெக்சன்

Movie Adipurush: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் கீர்த்தி சனோன் மற்றும் சயிப் அலிகான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஆதிபுருஷ் படத்திற்கு பயங்கரமாக ப்ரோமோஷன் செய்திருந்தனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமாருக்கு என்று ஒரு இருக்கை விடப்பட்டிருந்தது. மேலும் ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

இதனால் ஆதிபுருஷ் படமும் நல்ல வசூல் பெரும் என்ற நம்பிக்கையில் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்திருந்தனர். ஆனால் ரிலீசுக்கு முன்பே ஆதிபுருஷ் படத்திற்கு சர்ச்சை தொடங்க ஆரம்பித்தது. அதையும் மீறி ஒரு வழியாக படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் முதல் இரண்டு நாட்கள் ஒரு அளவு நல்ல வசூலை பெற்ற நிலையில் மூன்றாவது நாளில் பெருத்த அடி வாங்கி இருக்கிறது. இதனால் ஆதிபுருஷ் படக்குழு மிகுந்த அப்செட்டில் இருக்கிறார்களாம்.

அதன்படி முதல் நாளில் மொத்தமாக 85 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில் இதைவிட சற்று குறைந்து 80 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு கிடைக்கும் மோசமான விமர்சனம் காரணமாக மூன்றாவது நாளில் வெறும் 60 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

நேற்று விடுமுறை நாட்களாக இருந்தும் ஆதிபுருஷ் படத்தைப் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு குறைந்துள்ளது. பிரபாஸ் இந்த படத்தை வைத்து பல கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் எல்லாம் புஸ் என்ற ஆகியுள்ளது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வசூலில் பாதிப்பு ஏற்படும் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.