குணசேகரனை மிரட்டும் ஜான்சி ராணி.. கரிகாலன் காதலை ஊத்தி மூடிய ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி பிளான் பண்ணியபடி ஆதிரையை ஒரு வழியாக கரிகாலனிடமிருந்து தனியாக கூட்டி வந்து விடுகிறார். பிறகு ரேணுகா, நந்தினி, ஜனனி மற்றும் ஆதிரை அனைவரும் தப்பித்து வரும் வழியில் இவர்களை கண்டுபிடித்து விடுகிறார் கரிகாலன்.

ஆனால் அவரைத்தான் ஈசியாக ஏமாற்ற முடியுமே ஏனெனில் அவர் சரியான படித்த முட்டாள் பீஸ். அடுத்ததாக இவர்கள் அனைவரும் காரில் ஏறிக்கொண்டு சக்தியிடம் கோவிலில் காத்திரு நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்ற தகவலை கொடுத்து விடுகிறார்கள்.

இதற்கு இடையில் கோயிலுக்கு போன இவர்கள் இன்னும் வரவில்லை என்று மண்டபத்தில் அனைவரும் ரொம்பவே பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக நேரம் ஆக ஆக ஜான்சி ராணிக்கு பயம் வந்து விடுகிறது. இவருக்கு மட்டுமா அடி மனதில் குணசேகரனும் பயத்தில் கதி கலங்கித் தான் இருக்கிறார்.

சரியா சொல்ல வேண்டுமென்றால் குணசேகரனுக்கு தோற்று விட்டோம் என்ற நினைப்பு வந்து விட்டது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்திருக்கிறார். இவரைப்போல் ஜான்சி ராணி இருக்க முடியுமா. ஏனென்றால் எப்படியாவது கரிகாலன் ஆதிரை திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு குணசேகரனின் மொத்த சொத்தையும் ஆட்டைய போட்டு விடலாம் என்ற இவரோட திட்டம் பாழாகிப் போவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.

ஆனால் பாவம் மண்டபத்தில் ஈஸ்வரி மற்றும் குணசேகரனின் அம்மா மாட்டிக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் வரவில்லை என்றால் இவர்களிடம் தான் மொத்த கேள்வியும் திரும்பும். அந்த நேரத்தில் கரிகாலன், மாமா என்று உள்ளே வந்து நடந்த அத்தனையையும் சொல்லி விடுகிறார். பின்பு ஜான்சி ராணி இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டும். அப்படி இல்லையென்றால் நீ வேற ஜான்சி ராணியே பார்ப்பாய் என்று குணசேகரனை மிரட்டுகிறார்.

இதற்கு அடுத்து நந்தினி காரில் செல்லும்போது அத்தையை மிரட்டி கேட்டு ஏதாவது உளறி விட்டாள் என்ன பண்ண மொத்த பிளானும் சொதப்பி விடும் என்று சொல்கிறார். அதற்கு ஜனனி அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் எந்த கோவிலில் கல்யாணம் பண்ண போகிறோம் என்று அவர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனின் ஆட்டத்திற்கு வேட்டு ரெடியாகிறது.