திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்ல படங்கள் நடித்தும் ராசி இல்லாமல் தோற்றுப் போன 5 நடிகர்கள்.. வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லாத விஜய் ஆண்டனி

Unlucky Actors in Kollywood: பொதுவாக சினிமாவில் வெற்றி தோல்வி என்பது ஏற்ற இறக்கமாக தான் அனைவருக்கும் அமையும். ஆனால் சில நடிகர்களுக்கு நல்ல கதைகள் அமைந்தும் அந்தப் படங்கள் ராசி இல்லாமல் தோற்றுப் போயிருக்கிறது. ஆனாலும் சில நடிகர்கள் விடாமுயற்சியுடன் போராடி நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.

விஷ்ணு விஷால்: பொதுவாக இவர் தேர்ந்தெடுக்கும் படத்தின் கதைகள் அனைத்தும் நன்றாகத் தான் இருக்கும். அதன் மூலம் ஒரு சில வெற்றி அடைந்தாலும், தொடர்ந்து இவரால் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. ஒரு படம் நன்றாக அமைந்தால் அடுத்து இரண்டு படங்கள் தோல்வியில் முடிகிறது. இது என்ன இவருக்கு வந்த சோதனை என்பது போல் இவருடைய சினிமா வாழ்க்கை தடுமாறிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடித்த ராட்சசன் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியான நிலையில் கடைசியாக வெளிவந்த கட்டா குஸ்தி படம் வெற்றியைக் கொடுத்தது.

Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?

பரத்:  பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைத்தது. அதன் மூலம் காதல், பிப்ரவரி 14, பட்டியல், எம் மகன், வெயில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் சூழ்நிலை மாறிவிட்டது. அதாவது நல்ல கதைகள் அமைந்தாலும் இவர் நடித்தால் அந்த படம் ஓடாது என்று சொல்லிக் கொள்ளும் படியான ராசி இவரிடம் ஒட்டிக் கொண்டது. வெயில் படத்திற்கு பிறகு சொல்லிக்கும் படியான படங்கள் எதுவும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

சித்தார்த்: இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவருடைய கதை தேர்வு மற்றும் நடிப்பு எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். ஆனாலும் ஏதோ ஒரு விஷயம் இவரிடம் குறையாக இருப்பதினால் என்னவோ தொடர்ந்து சினிமாவில் நிலையான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இவர் படங்களில் நடித்து ஃபேமஸ் ஆகிறாரோ இல்லையோ பல சர்ச்சைகளில் சிக்கி ரொம்பவே பாப்புலர் ஆகிவிடுகிறார் என்றே சொல்லலாம்.

Also read: கலாச்சார சீர்கேட்டுக்கு துணை போன சித்தார்த்.. மேடையிலேயே கொந்தளித்த பிரபலம்

ஆதி: இவர் நடித்த முதல் படமான மிருகம் வித்தியாசமாகவும், எதிர்மறையான கதாபாத்திரமாகவும் அமைந்திருக்கும். ஆனாலும் அந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன்பின் எங்கே போனார் என்று தேடும்படியாக இவருடைய சினிமா கேரியர் அமைந்துவிட்டது.

விஜய் ஆண்டனி: இவர் இசையமைப்பாளராக இருக்கும் பொழுது நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் “நான்” என்ற படத்தில் நடித்தார். அதன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் சில படங்களை வெற்றி படங்களாக வாகை சூடிக்கொண்டார். இதனை அடுத்து திருஷ்டி கழிக்கும் விதமாக சில படங்கள் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக வேகமாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் இவரிடம் நிதானம் இல்லாததால் சில விபத்துக்கு ஆளாகி அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார்.

Also read: தட்டு தடுமாறும் விஜய் ஆண்டனி.. அதிர்ச்சியை கிளப்பிய பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Trending News