1. Home
  2. எவர்கிரீன்

டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்

டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்
ஜெய்யுடன் டேட்டிங் செய்துவிட்டு கழட்டிவிட்ட 3 நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.

Actor Jai: தமிழ் சினிமாவிற்கு தளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் குணா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் வெகு சீக்கிரமே பிரபலமாகி, அடுத்தடுத்து கதாநாயகனாக நடிக்க துவங்கியவர் தான் நடிகர் ஜெய். இவர் தனக்கு கிடைத்த பேரும் புகழையும் வைத்துக்கொண்டு ஓவர் ஆணவத்தில் ஆடத் துவங்கினார். பத்துக்கும் மேற்பட்ட  படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாதியிலே கழண்டிருக்கிறார். ஒழுங்காக சூட்டிங் வரமாட்டார், ரீ டேக் கேட்டால் கோபப்படுவார். இப்படி ஓவர் ஆட்டிடியூட் காட்டியே பாதி படங்களை விட்டுவிட்டார். இவருடன் டேட்டிங் செய்து வேஸ்ட் பீஸ்ன்னு முடிவெடுத்து 3 நடிகைகள் கழட்டிவிட்டுள்ளனர். 

அஞ்சலி: தெலுங்கு திரையுலகின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அஞ்சலி, தமிழ் சினிமாவிற்கு கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம்  அறிமுகமாகி, அதன் பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் உடன் இணைந்து  நடித்தார். அந்த படத்தில் இருந்து இருவரும் நண்பர்களாக பழகி, அதன் பின் பலூன் படத்தில் இவர்களது காதல் மலர்ந்தது. இந்த படத்தில் இவர்களுக்கிடையே ரொமான்ஸ் கொழுந்துவிட்டு எரிந்தது. 

இவர்கள் இருவரும் தனியாக ஊர் சுற்றிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அதன் பின் ஜெய்யுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த அஞ்சலிக்கு போகப்போக அவர் வேஸ்ட் பீஸ்னு தெரிஞ்சிருச்சு. அதனால் அவரை விட்டுப் பிரிந்து விட்டார். இருப்பினும் அஞ்சலி இந்த காதல் தோல்வியின் காரணமாகத்தான் அந்த சமயத்தில் தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து விட்டார். அதன் பின் இப்போது அஞ்சலி மறுபடியும்  சினிமாவில் ரவுண்ட் கட்டி  நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுல்யா ரவி: வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் வெளியான படம் தான் எண்ணித் துணிக. இந்த படத்தில் இவர்களுக்கிடையான ரொமான்ஸ் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் இவர்களது காதல் தொடர்ந்தது. ஜெய்யுடன் அதுல்யா டேட்டிங் செய்தார்.

சில நிகழ்ச்சியில் இவர்கள் ஒன்றாக கலந்து கொண்டதும், இணைந்து புகைப்படங்களை வெளியிட்டதும் அவர்களது காதலை ஊர்ஜிதப்படுத்தியது. ‘பழக பழக பாலும் புளிக்கும்’ என்பது போல் வெகு சீக்கிரமே ஜெய் ஒரு டம்மி பீஸ் என்பதை தெரிந்து அதுல்யா அவரை கழட்டிவிட்டார். 

வாணி போஜன்: சின்னத்திரை நயன்தாராவாக சீரியல் ரசிகர்களிடம் பிரபலமடைந்து அதன் பின் வெள்ளித் திரையில் என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகை வாணி போஜன். இவர் பிளேபாய் ஜெய் உடன் ட்ரிபிள்ஸ் என்கின்ற வெப் தொடரில் ஜோடியாக நடித்தார். அதில் நடித்த பிறகு டேட்டிங் செய்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.

இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு தான் ஜெய்  உடைய உண்மையான சுயரூபம் அவருக்கு தெரிய வந்தது. அவர் திமிரு தனத்தால் சினிமாவில் முன்னேறவே மாட்டார் என்பதை புரிந்துகொண்டு தன்னுடைய காதலை முறித்துக் கொண்டார்.

இவ்வாறு இந்த மூன்று நடிகைகள்தான் ஜெய் உடன் படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் டேட்டிங் செய்து, அதன் பிறகு வேஸ்ட் பீஸ் என கழட்டி விட்டனர். 

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.