Director Lokesh: லோகேஷ் சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்தில் யாரும் எட்ட முடியாத அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். இவர் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் நாலா பக்கமும் இவரை பற்றி தான் பேச வைத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு மிகவும் திறமையுள்ள வித்தியாசமான இயக்குனர்.
அதே நேரத்தில் இவருடைய குணமும் மிகவும் தன்மையானது என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் ஒருவர் மட்டும் எந்நேரமும் இவரை கரித்துக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். அதாவது இவர் ஆரம்பத்தில் கைதி படத்திற்காக வாங்கிய சம்பளம் 30 லட்சம்.
Also read: வாய்ப்பும், வெற்றியும் எளிதாய் கிடைத்ததால் வரும் கர்வம்.. லோகேஷ், எச். வினோத் அடாவடி பேச்சு
ஆனால் அதன் பிறகு இவர் எடுத்த படங்களில் மூலம் இவருடைய மார்க்கெட் அபரித வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக தற்போது இவருடைய சம்பளம் 50 கோடிக்கு உயர்ந்து விட்டது. இதை வைத்து இந்த மனுஷன் எந்த அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறார் என்பதை தீர்மானிக்க முடியும்.
கைதி படத்திற்கு பின் ரெண்டு படங்கள் மட்டும் எடுத்த நிலையில் இவருடைய சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்திருப்பதால் தற்போது கைதி 2 படத்தை எடுக்க மறுக்கிறார். இதற்கிடையில் இவர் கைதி 2 படத்தை கண்டிப்பாக எடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர்.
Also read: அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்
ஆனால் லோகேஷ் முடியாது என்ற எண்ணத்தில் இருப்பதால் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தற்போது உங்களுடைய மார்க்கெட் என்னவோ அந்த சம்பளத்தையே நான் தர ரெடியாக இருக்கிறேன். எனக்கு கைதி 2 படத்தை மட்டும் முடித்து கொடுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத லோகேஷ் தற்போது வளர்ந்ததால் உச்சாணிக்கொம்பிற்கு சென்று தலைகணத்துடன் ஆடி வருகிறார். இந்த தயாரிப்பாளரின் நிலைமையை பார்க்கும் பொழுது கொஞ்சமாவது அவர் மீது இறக்கம் காட்டுங்கள் லோகேஷ் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் கைதி 2 தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பை விட ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
Also read: 5 ஜாம்பவான்களை அடுத்தடுத்து இயக்கத் தயாராகும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம்