திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஓவர் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரவிந்த்சாமி

Actor Aravindswamy: இயக்குனர் மணிரத்னம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. தன் கேரக்டருக்கு பொருந்துமாறு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவ்வாறு இருப்பின் தற்பொழுது இவரின் நடிப்பில் வெளிவராமல் கிடப்பையில் போடப்பட்ட படங்களின் தகவலை பற்றி இங்கு காண்போம்.

ரோஜா படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின் பம்பாய், இந்திரா, மின்சார கனவு போன்ற படங்கள் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. தன் படங்களை குறிப்பாக தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டியதால் இவர் அதிக பட வாய்ப்பு பெறவில்லை.

Also Read: அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

அவ்வாறு தனக்கு வாய்த்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், குறிப்பிட்ட காலங்களில் சில படங்களில் மட்டும் தான் நடித்திருப்பார். மேலும் ஒரு காலகட்டத்தில், இவரின் படங்கள் போதிய வரவேற்பு பெறாததால் சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டார்.

அதைத்தொடர்ந்து 2012ல் இயக்குனர் மணிரத்னத்தின் படமான கடல் படத்தில் பாதரியார் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். இருப்பினும் இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 2015 ல் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருப்பார். இப்படம் இவரின் ரீ என்ட்ரி படமாக பார்க்கப்பட்டது.

Also Read: மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

அதன் பின் தொடர்ந்து அடுத்த கட்ட படங்கள் ஆன சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், கள்ள பார்ட், வணங்காமுடி, புலனாய்வு போன்ற படங்களில் கமிட்டாகினார். இருப்பினும் அப்படங்களுக்கு டப்பிங் பேசாமல் கிடப்பையில் போடப்பட்டு தயாரிப்பாளர்கள் தரப்பில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இவரின் மெத்தனமான நடவடிக்கையும் மற்றும் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டிற்கும் ஆளாகி வருகிறார். அவ்வாறு தொடர் பஞ்சாயத்து நடைபெற்று வரும் இவரின் படங்கள் எப்போது வெளியாகும் என்பது இன்றுவரை விடை கிடைக்காமல் இருந்து வருகிறது.

Also Read: கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் சாதிய படம் என கூறிய மாரி செல்வராஜ்.. வெடிக்கும் சர்ச்சை

- Advertisement -

Trending News