வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

ஒரே சமயத்தில் தலைவர், தளபதி விசுவாசிகளை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை.. அநியாயத்திற்கு கலாய்த்து போட்ட ட்விட்

Blue Sattai Maran: வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் முதல் டாப் நடிகர்கள் வரை ஒருத்தரையும் விட்டு வைக்காமல், விமர்சனம் என்கின்ற பெயரில் இஷ்டத்திற்கு விமர்சிப்பவர்தான் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இப்போது சோசியல் மீடியாவில் விஜய்யின் அரசியல் பயணத்தை குறித்து தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இவர் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கி போட்டி போடுவது உறுதியாகிவிட்டது.

இதை வைத்து ப்ளூ சட்டை மாறன் செம்மையாக கலாய்த்து விட்டிருக்கிறார். இதனால் தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் வெறியேறி இருக்கின்றனர். ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வருவதாக 25 வருடம் ஏமாற்றி அவருடைய ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டார்.

Also Read: 2 நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்த தளபதி விஜய்.. அஜித்தை கிண்டல் அடித்து ப்ளூ சட்டை போட்ட பதிவு

இப்போது விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் அவருடைய அரசியல் பயணம் வேகமெடுத்து இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி 25 வருடத்தை கடத்திவிட்டார்.

அதேபோல நீங்களும் செஞ்சுறாதீங்க அண்ணோவ். நீங்கள் அரசியலில் குதித்தால் எங்களுக்கு நல்லாவே பொழுதுபோகும். கண்டெண்டுக்கு நாயா பேயா அலையும் எங்களுக்கெல்லாம் கண்டன்டும் கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக விஜய் மற்றும் ரஜினியை ஒரே சமயத்தில் அநியாயத்திற்கு கலாய்த்து விட்டார்.

Also Read: யோகா செய்தால் கோபம் குறையும்.. ரஜினி, சிவகுமாரை வைத்து நக்கலடித்த ப்ளூ சட்டை

இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி ரசிகர்கள் வெறி ஏறி இருக்கின்றனர். அதேபோல இந்த ட்விட்டர் பதிவுடன் ஒரு போஸ்டரையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் நாளை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் ‘நா ரெடி’ என்ற முழு பாடலும் வெளியாகுவதால் அந்தப் பாடலில் விஜய் ‘நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா.. தனியா வரவா..’ என்ற பாடல் இடம்பெற்ற போஸ்டரையும் டேக்(tag) செய்து விஜய்யின் அரசியல் வருகையை ரஜினியுடன் ஒப்பிட்டு கலாய்த்திருக்கிறார்.

நாளை தன்னுடைய பிறந்தநாள் ட்ரீட்டாக தளபதி தன்னுடைய ரசிகர்களுக்கு லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை வெளியிட போகிறார். ஆனால் அதை வைத்தே இப்போது ப்ளூ சட்டை மாறன் பங்கம் செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்தது மட்டுமல்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளால் கமெண்டில் திட்டி தீர்க்கின்றனர்.

twit-cinemapettai
twit-cinemapettai

Also Read: அத்தி பூத்தார் போல் நச்சுன்னு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை.. வேண்டுமென்றே குட்டையை குழப்பும் பயில்வான்

Trending News