Tamil directors: சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான ஒரே படத்திலேயே தன்னிடம் இருந்த மொத்த திறமையையும் காட்டி, அதன்பின் படங்களை எடுக்க முடியாமல் திணறிய 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.
சரவணா சுப்பையா: இவர் இயக்குனராக அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் ஒரு அறிமுக இயக்குனர் இயக்கிய படம் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு சிட்டிசன் படத்தை மிகச் சிறப்பாக இயக்கினார். இந்தப் படத்திற்கு பிறகு தான் அஜித்தின் சினிமா கேரியர் டாப் கீரில் எகிறியது. இந்த படத்தின் தொடர்ச்சியாக ஏபிசிடி என்ற படத்தை இயக்கிய சரவணா சுப்பையா, அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மீண்டும்’ என்ற ஒரு படத்தையும் இயக்கினார்.
ஆனால் சிட்டிசனுக்கு பிறகு இவர் எடுத்த இரண்டு படங்களும் பயங்கர ப்ளாப் ஆனது. ஒரு இயக்குனராக தன்னிடம் இருந்த சரக்கெல்லாம் தீர்ந்து விட்டது என முடிவெடுத்து, தற்போது டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் பெரும்பாலான படங்களில் காவல்துறை அதிகாரியாக மிரட்டுகிறார். கடைசியாக இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திலும் நடித்திருந்தார்.
Also Read: டைரக்ஷனில் இருந்து நகைச்சுவையில் குதித்த 5 பிரபலங்கள்.. இதில் தேசிய விருது பெற்ற நடிகர்
தருண் கோபி: இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட தருண் கோபி இயக்கிய முதல் படம் விஷாலின் திமிரு. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. திமிரு படத்திற்கு பிறகு சிம்புவின் காளை படத்தை இயக்கிய தருண் கோபி, அதன் பிறகு படங்களை இயக்குவதில் பெரிதாக விருப்பம் கொள்ளாமல் கதாநாயகனாக நடிக்க கிளம்பிவிட்டார்.
அப்படி இவர் ஹீரோவாக நடித்த படம் தான் மாயாண்டி குடும்பத்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மணிவண்ணனின் இளைய மகனாக தருண் கோபி நடித்தார். அதன் பிறகு இவருடைய நடிப்பில் பேச்சியக்கா மருமகன், பேய காணும் போன்ற படங்களும் வெளியானது . சமீபத்தில் காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் என்ற படத்தில் ஆர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தரும் கோபி நடித்திருந்தார்.
Also Read: அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்
வல்லரசு மகாராஜன்: இவரது பெயர் எம் .மகாராஜன். ஆனால் இவர் சினிமாவில் விஜயகாந்த், தேவயானி நடிப்பில் வெளியான வல்லரசு என்ற படத்தை முதன்முதலாக இயக்கியதால் இவரை ‘வல்லரசு மகாராஜன்’ என அழைத்தனர். தமிழில் வல்லரசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்த வருடமே ஹிந்தியில் இந்தியன் என்று டைட்டிலில் வல்லரசு படத்தை மறு ஆக்கம் செய்து ரிலீஸ் செய்தார். அதன் பிறகு அவர் மறுபடியும் அஜித்தின் ஆஞ்சநேயா, விஜயகாந்த்தின் அரசாட்சி போன்ற படங்களை எடுத்தார். ஆனால் இந்தப் படங்கள் இரண்டுமே பயங்கர பிளாப் ஆனது. இயக்குனராக வல்லரசு படத்தில் தன்னுடைய மொத்த திறமையும் காட்டிய மகாராஜன், அந்தப் படத்திற்கு பிறகு டைரக்டராக அவர் எடுத்த படங்கள் செல்லுபடியாகாததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ராஜகுமாரன்: பார்த்திபன், அஜித், தேவயானி நடிப்பில் வெளியான ‘நீ வருவாய் என’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான ராஜகுமாரன் தன்னுடைய முதல் படத்திலிருந்து ஹிட் கொடுத்ததால், அடுத்தடுத்து தேவயானியை வைத்தே விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், சிவராம், திருமதி தமிழ் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் இந்த படங்களுக்கு எல்லாம் முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிடைக்காததால், பிறகு சினிமாவில் நடிகராக குணச்சித்திர கேரக்டரில் நடிக்க துவங்கினார். இவர் இயக்குனராக என்னதான் தோற்றாலும் அவர் இயக்கிய ஐந்து படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த தேவயானியை காதல் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்று, நிஜ வாழ்க்கையில் வெற்றி கண்டார்.
சிங்கம் புலி: இயக்குனர், வசனகர்த்தா, நடிகர் என பல வித அவதாரங்களை எடுத்த சிங்கம் புலி முதல் முதலாக அஜித் நடிப்பில் வெளியான ரெட் என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பிறகு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான மாயாவி என்ற படத்தை இயக்கினார். ஆனால் ரெட் படத்திற்கு கிடைத்த வசூல் மாயாவிக்கு கிடைக்காததால் அடுத்ததாக தனித்து படங்களை இயக்காமல் இயக்குனர் பாலாவுடன் பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்.
அதுமட்டுமல்ல இவர் காமெடி நடிகராகவும் நிறைய படங்களில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அரை மெண்டலாக ‘மாயாண்டி விருமாண்டி’ என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்தார். அதன் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் படத்தில் எம்ஜிஆர் சின்னசாமி ஆகவும், மனம் கொத்தி பறவை படத்தில் மோடுமுட்டி ஆகவும், தேசிங்கு ராஜா படத்தில் கௌஷிக் என நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கினார். அதிலும் மனம் கொத்தி பறவை படத்தில் ‘டங் டங்..’ என்ற பாடலில் ஐட்டம் நடிகையுடன் செம்மையாக குத்தாட்டம் போட்டார். ஒரு இயக்குனராக இருந்து காமெடியனாக தன்னுடைய டிராக்கை மாற்றிய சிங்கம் புலியின் நடிப்புக்கு ரசிகர்கள் தங்களின் அமோக வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: அஜித் அறிமுகப்படுத்திய 6 இயக்குனர்கள்.. திருப்புமுனையை ஏற்படுத்திய ஏ ஆர் முருகதாஸ்
இவ்வாறு இவர்கள் அனைவரும் தனது முழு திறமையையும் ஒரே படத்தில் காட்டிவிட்டு, அதன் பின் படம் எடுக்க தெரியாமல் போனவர்கள். அதிலும் சிங்கம் புலி இயக்குனராக இருந்த பின், காமெடியனாக சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.