திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பிரபலம்.. குடும்ப பஞ்சாயத்தை சந்தி சிரிக்க வைத்த ரட்சிதா

Actress ratchitha: கடந்த சில நாட்களாகவே தினேஷ், ரட்சிதா குடும்ப பிரச்சனை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு ரட்சிதா தன் கணவர் தன்னை மிரட்டுவதாகவும், தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து அவருடைய கணவரும் காவல் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது சரி வராது என்ற பட்சத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை தினேஷ் ஒரு பேட்டியில் தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

Also read: அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

அதில் சாதாரணமாக எல்லார் குடும்பத்திலும் வரும் பிரச்சனைதான். ஆனால் ரட்சிதா தனக்கு அதிக சுதந்திரம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால் சில பிரச்சனைகள் வந்ததாக அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும் ஜிஜி ரட்சிதாவின் நெருங்கிய தோழி என்பது அனைவருக்கும் தெரியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் இதை குறிப்பிட்டிருந்தார். இப்படி நெருங்கிய தோழியாக இருக்கும் இவரின் பேச்சை கேட்டு தான் ரட்சிதா பல தவறான முடிவுகளை எடுத்ததாகவும் தினேஷ் கூறியிருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. தோழி என்ற பெயரில் அவர் கூறும் சில அட்வைஸ் எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது.

Also read: பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

சாதாரணமாக கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனையை ஒரு தோழியாக சரிப்படுத்தாமல் அதை அவர் இன்னும் பெரிதாக்கி இருக்கிறார். இதைப்பற்றி கூறிய தினேஷ் ஜிஜியிடம் இது குறித்து நான் பேச முயன்ற போது நான் அவரை மிரட்டியதாக காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு பின்பு தான் ரட்சிதா தன் கணவர் மீது இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் பிரிந்திருக்கும் நிலையில் திடீரென இப்படி ஒரு புகார் அவர் கொடுத்திருப்பது ஏற்கனவே சந்தேகத்தை கிளப்பியிருந்தது.

Also read: தனத்துக்கு இப்படி ஒரு நோயா?. அதிர்ச்சியில் உறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

அந்த வகையில் தன் தோழிக்காகவே அவர் இப்படி ஒரு புகாரையும், வழக்கு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பதற்காக சில எக்ஸ்ட்ரா விஷயங்களையும் சேர்த்து கூறியிருக்கிறார். இதை வருத்தத்தோடு கூறிய தினேஷ் இனிமேல் நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

Trending News