Tamil Actors: சினிமாவில் என்ன தான் ஹீரோவாக நடித்துக் கொண்டு கெத்து காட்டினாலும், ஒரு கட்டத்தில் மார்க்கெட் போய்விடும் என்பதை முன்கூட்டியே அறிந்து, சம்பாதித்த பணத்தை எல்லாம் வேறு வேறு விதத்தில் முதலீடு செய்வார்கள். ஆனால் நடிகர்களாக இருந்து கொண்டு சாஃப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடல் எடுக்கும் 5 நடிகர்களை பற்றி பார்ப்போம். அதிலும் இதற்கெல்லாம் அரவிந்த்சாமி தான் பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
நெப்போலியன்: ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நெப்போலியன் தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து கலக்கியவர். நெப்போலியன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனின் மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார். அப்போது 2000 ஆம் ஆண்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஜீவன் டெக்னாலஜி’ என்ற ஐடி நிறுவனத்தை துவங்கினார். சுமார் 23 வருடங்களாக அந்த நிறுவனம் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
அரவிந்த்சாமி: 90களில் சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதை கொள்ளையடித்த அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்த ரோஜா, பம்பாய் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் அடுத்தடுத்து தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம் போன்ற படங்களிலும் நடிக்க துவங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிவதை புரிந்துகொண்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் பிசினஸில் முதலீடு செய்தார். அதிலும் சொந்தமாக ஐடி கம்பெனியை நிர்வகித்து சாப்ட்வேர் பிசினஸில் கொடி கட்டி பறக்கிறார். இவர்தான் இளம் நடிகர்களுக்கெல்லாம் ஐடி பிசினஸ் துவங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ஓவர் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரவிந்த்சாமி
அப்பாஸ்: காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 90களில் அதிக பெண் ரசிகைகள் மனதைக் கவர்ந்த இன்னொரு சாக்லேட் பாய்தான் நடிகர் அப்பாஸ். ஆனால் அதன் பின் சில வில்லத்தனமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கு அழகும் திறமையும் இருந்தும் கூட அவரால் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாததால் ,முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் ஐடி கம்பெனியை நிறுவி அதன் சிஇஓ ஆக நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
டாப்ஸி: பிரபல நடிகையான இவர் சொந்தமாக ஒரு IT நிறுவனத்தையும் துவங்கி, நடத்தி வருகிறார். அதிலும் டாப்ஸி சற்று வினோதமாக யோசித்து கல்யாண வேலைகளை சார்ந்த தொழிலையும் துவங்கியிருக்கிறார். இதன் மூலம் கல்யாணத்திற்கு தேவையான அத்துணை ஏற்பாடுகளையும் அவர்களே செய்து விடுவார்கள். மணமகன், மணமகளை அழைத்துக் கொண்டு வந்தால் போதும். சமையல், அலங்காரம், மண்டபம் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும் பிசினஸையும் டாப்ஸி செய்து வருகிறார்.
சோனு சூட்: அருந்ததி பட வில்லன் பசுபதியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஹிந்தி நடிகர் சோனு சூட். கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல், உயிருக்கு போராடுபவர்களுக்கு ஆக்சிஜன் உட்பட பல உதவிகளை செய்ததன் மூலம், இவர் மீது தனி மரியாதையே ஏற்பட்டது. இவர் சொந்தமாக ஐடி நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் வேலையில்லாமல் தவிக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்ல இவர் கிராமப்புற தொழில் முனைவோருக்கான வணிகத்திலிருந்து வணிகத்திற்கான தொழில்நுட்ப தளமான(business-to-business travel technology platform) டிராவல் யூனியனை துவங்கி வேலைவாய்ப்பை உருவாக்கினார். இது மட்டுமல்ல சோனு சூட் தன்னுடைய சாஃப்ட்வேர் கம்பெனி மூலம் புது புது ஆப் மற்றும் டெக்னாலஜிகளை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவர முனைப்புடன் செயல்படுகிறார்.
இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் பிசினஸிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர்கள். அதிலும் இவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.