சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வடிவேலு செய்த அடாவடிகள்.. எவ்வளவோ பொருத்தம் ரெட் கார்டு கொடுத்ததற்கு பின்னணியான 5 விஷயங்கள்

Comedian Vadivelu: தன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு நகைச்சுவையில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் வடிவேலு. இந்நிலையில் இவர் மீது ரெட் கார்டு போடப்பட்ட காரணம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

நடிகர் ராஜ்கிரணின் சிபாரிசில் சினிமா வாய்ப்பு பெற்றவர் வடிவேலு. அதன்பின் செந்தில்-கவுண்டமணி காமெடிகளை போல இவரின் நகைச்சுவைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பல வாய்ப்புகளை பெற்று வைகை புயல் என்ற பெயருடன் வலம் வந்தார்.

Also Read: யாருக்கும் அடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்ட கார்த்தி.. முதல் முதலாக அஜித் படத்தில் கம்பேக்

ஒரு காலகட்டத்தில் இவரின் நகைச்சுவைக்கின்றே படம் வெற்றி கண்டதுண்டு. அவ்வாறு தன் வளர்ச்சியில் மற்றும் முழு கவனம் செலுத்தி வந்த இவர் தன்னை தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல செய்த காரியம் இன்று ரெட் கார்டு வரை வந்து நிற்கின்றது.

தன் நகைச்சுவைக்கு கிடைத்த வரவேற்பை கொண்டு தன் நடவடிக்கையில் மாற்றம் காட்ட தொடங்கினார் வடிவேலு. அவ்வாறு தான் மேற்கொள்ளும் படங்களில் கால்சீட் பெற்றுக்கொண்டு மேலும் அதற்கு பணமும் வாங்கி கொண்டு தயாரிப்பாளர்களை இழுத்தடிப்பது. மேலும் ஷூட்டிங்-க்கு வராமல் பத்து நாள் வரை படப்பிடிப்பை ஒத்தி வைப்பது.

Also Read: பழம்பெரும் நடிகை ஆசைப்பட்டு அடைந்த சின்ன பையன்.. வெளியில் சொன்னதால் மிரட்டி கொன்ற சம்பவம்

மேலும் குறிப்பாக தனக்கு கீழே வேலை பார்க்கும் சக நடிகர்களின் வளர்ச்சி பிடிக்காது அவர்களின் நடிப்பிற்கு முட்டுக்கட்டை போடுவது. டயலாக் ரைட்டர் சொல்வதை கேட்காமல் இவர் இஷ்டத்துக்கு பேசுவது. இயக்குனர் சொல்வதற்கு எதிர்மறையாக நடிப்பது. மேலும் படத்திற்கு ஏற்றவாறு காஸ்ட்யூம் போடாமல் இஷ்டத்திற்கு காஸ்டியூம் போடுவது போன்ற பல காரியங்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தார்.

இது போன்ற நடவடிக்கை தொடர்ந்ததால் இவருக்கு சினிமா தரப்பில் ரேட் கார்டு கொடுக்கப்பட்டது. மேலும் தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்து வரும் இவரின் படங்களும் சரிவர வரவேற்பு இல்லாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. அவ்வாறு இவரின் வளர்ச்சிக்கு இவரே முட்டுக்கட்டையாய் இருந்து வருகிறார்.

Also Read: ஏவிஎம் நிறுவனம் வசூல் வேட்டை ஆடிய லோ பட்ஜெட் படம்.. வசூல் சாதனையில் அமேசான் ஓடிடி வரை சூப்பர் ஹிட்

Trending News