வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

நிறைய ஹிட் படங்களை கொடுத்து மாயமாக போன 5 இயக்குனர்கள்.. விஜய், விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்

Missing and Hit Directors: சினிமாவைப் பொறுத்தவரை ஜெயிக்க வேண்டும் என்றால் திறமை மட்டும் போதாது கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அந்த வகையில் சில இயக்குனர்கள் பெரிய நடிகர்களுக்கு திருப்புமுனையாக பல படங்களை இயக்கி இருக்கிறார்கள். ஆனால் அதன் பின் தொடர்ந்து சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் மாயமாக மறைந்து போய் விட்டார்கள். அந்த இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

சரண்: இவர் ஆரம்பத்தில் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பயணித்து, அதன் பின் சிறந்து இயக்குனர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வந்தார். இவர் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் மிகப்பெரிய ஹிட் படமானது. அதனைத் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே ஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற வெற்றி படங்களை கொடுத்து சிறந்த இயக்குனராக வந்தார். ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால் காணாமல் போய்விட்டார்.

Also read: அதர்வா என்ன பெரிய அஜித்தா.? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதுன்னு மல்லு கட்டிய இயக்குனர்

கதிர்: இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமான இதயம். இப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. அதன் பின்பு உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற காதல் சம்பந்தமான படங்களை எடுத்தார். ஆனால் அதன் பிறகு எங்கே இருக்கார் என்று தேடும் அளவிற்கு மாயமாகி விட்டார்.

தரணி: இவருடைய பலமே சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படங்களை இயக்குவது தான். அந்த வகையில் எதிரும் புதிரும், தில், தூள், கில்லி, குருவி, ஒஸ்தி போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய படம் தான் விஜய்க்கும், விக்ரமுக்கும் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த இயக்குனர் எங்கே என்று ஆவலாக எதிர்பார்க்கும் படி சினிமாவை விட்டு போய்விட்டார்.

Also read: விஜய்க்காக காத்திருக்கும் ரகடான இயக்குனர்.. லோகேஷை ஓவர்டேக் செய்ய தயாராகும் ஸ்கிரிப்ட்

சிம்பு தேவன்: இவரது படங்கள் பெரும்பாலும் கற்பனை, வரலாற்று மற்றும் நகைச்சுவை வைத்து தான் இருக்கும். அப்படிப்பட்ட இவர் இயக்கிய படங்கள் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அரை எண் 35 கடவுள், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், புலி. இந்தப் படங்கள் ஓரளவுக்கு சராசரி வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் தான் என்னமோ சினிமா செட்டாகாது என்று அடுத்த படங்களை இயக்காமல் சைலன்டாகி விட்டார்.

பேரரசு: இவருடைய படங்களில் வசனத்துக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரைமிங்காக டயலாக்கை அடுக்கிக் கொண்டே போகக்கூடிய இயக்குனர். இவர் இயக்குனராக அறிமுகமானது திருப்பாச்சி படம் தான். பிறகு திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி, போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். முக்கியமாக இவருக்கு ஊர் என்றால் ரொம்பவே பிடிக்கும் போல அதற்காகவே இவருடைய படங்களின் டைட்டில் அனைத்தும் ஊர் பெயரை வைத்திருப்பார். அப்படிப்பட்ட இயக்குனர் தற்போது உள்ள ட்ரெண்டிங்குக்கு நம்மளால் தாக்குப் பிடிக்க முடியாது என்று சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு போய்விட்டார்.

Also read: எதிர்பார்ப்பை எகிற விட்ட தங்கலான் பட அப்டேட்.. மதுரையில் நடக்கப் போகும் தரமான சம்பவம்

- Advertisement -spot_img

Trending News