சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரஜினி, ஜனகராஜ் காம்போவில் வெற்றி பெற்ற 6 படங்கள்.. சீரியஸாக மிரட்டிய பாட்ஷா பாய்!

Rajinikanth Janagaraj Combo: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு காமெடி காட்சிகள் என்பது எப்போதுமே கைவந்த கலை. முன்னணி காமெடி ஹீரோக்கள் ஆன கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் சேர்ந்து நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் ரஜினிக்கு பெஸ்ட் காம்போவாக இருந்தது நடிகர் ஜனகராஜ். ஜனகராஜ் காமெடி காட்சிகள் மட்டும் அல்லாது நிறைய சென்டிமென்ட் காட்சிகளிலும் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் ஜனகராஜ் காம்போவில் இந்த ஆறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கின்றன.

தம்பிக்கு எந்த ஊரு: காமெடி நடிகர்கள் யாருமே இல்லாமல் ரஜினிகாந்த் சோலோவாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் தம்பிக்கு எந்த ஊரு. இந்த படத்தில் ஜனகராஜ் நடிகை மாதவியின் வீட்டில் பணிபுரியும் ஆளாக நடித்திருப்பார். இதில் ரஜினி மற்றும் ஜனகராஜ் வரும் காமெடி காட்சிகளும் ரசிக்கும் படி இருக்கும்.

Also Read:ரஜினியை வெற்றி நாயகனாக மாற்றிய அண்ணாமலை.. படத்தில் கவனிக்கப்பட வேண்டிய இந்த 6 காட்சிகள்

பணக்காரன்: இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் பணக்காரன். இந்த படத்தில் ஜனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருப்பார். காமெடி காட்சி மற்றும் சென்டிமென்ட் காட்சியில் இவர்கள் இருவரின் காம்போ வெற்றி பெற்றது.

அண்ணாமலை: ரஜினிகாந்த் மற்றும் ஜனகராஜ் காம்போவில் மிகச்சிறந்த காமெடி காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தில் குஷ்புவிற்கு ஜனகராஜ் அட்ரஸ் சொல்லும் காட்சி, குஷ்பூ குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த அறையில் நுழைந்து விடும் ரஜினி அந்த சம்பவத்தை ஜனகராஜ் இடம் சொல்லும் காட்சி போன்றவை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

Also Read:ஓவர் ஹீரோயிசத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட 5 படங்கள்.. டெபாசிட் இழந்த சூப்பர் ஸ்டாரின் படம்

வீரா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் வீரா. இதில் மீனா மற்றும் ரோஜா இருவரையும் திருமணம் செய்து கொள்ளும் ரஜினி அதை மறைக்க படாதபாடுபடுவது நகைச்சுவையின் உச்சகட்டமாக இருக்கும். இதில் ஜனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் வரும் காட்சிகளும் ரசிக்கும் படி இருந்தது.

பாட்ஷா: ரஜினிகாந்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் பாட்ஷா. இத்தனை வருட தமிழ் சினிமாவில் இன்று வரை இதுபோன்ற ஒரு படம் வெளியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆட்டோக்காரன் மாணிக்கமாக இருக்கும் ரஜினியுடன் வரும் காமெடி காட்சிகளாக இருக்கட்டும், பாட்ஷா பாயுடன் வரும் சீரியஸ் காட்சிகளாக இருக்கட்டும் ஜனகராஜ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அருணாச்சலம்: 30 கோடி ரூபாய் பணத்தை, 30 நாளில் செலவு பண்ண வேண்டும் என்ற சவாலை ஏற்று கொண்ட ரஜினியின் நண்பர்களாக வரும் செந்தில் மற்றும் ஜனகராஜ் அடிக்கும் லூட்டி இந்த படத்தில் பயங்கர நகைச்சுவையாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. வழக்கம் போல ரஜினி-ஜனகராஜ் காம்போவும் வெற்றி பெற்றது.

Also Read:மயில் நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி.. கமலுக்கே இல்ல, உங்களுக்கு எப்படி?

Trending News