நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சக்தி.. குணசேகரன் முன் வாய்சவடால் விட்டு டம்மியாக நிற்கும் ஜனனி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை பார்க்கும் பொழுது இந்த மாதிரி ஒரு கேரக்டர் எங்க இருந்து புடிச்சிட்டு வந்தீங்க, என்று சொல்வதற்கு ஏற்ப அனைவரது வயிற்றெரிச்சலையும் கொட்டும் அளவிற்கு இவருடைய பேச்சும் நடவடிக்கையும் இருக்கிறது. நாடகம் தான் என்றாலும் சத்தியமாக இந்த ஒரு கேரக்டரை நம் வாழ்க்கையில் சந்தித்து விடக்கூடாது.

அதாவது இவருடைய வறட்டு கௌரவத்திற்காக தங்கச்சி வாழ்க்கையை குழி தோண்டி புதைத்து விட்டார். ஆனாலும் இவருடைய வெறி அடங்காமல் வீட்டுக்கு வந்ததும் இவருடைய மனைவி மற்றும் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை ஊமையாக இருந்த ஈஸ்வரி, முதல் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசுவது பார்க்க நன்றாக இருந்தது.

இதற்கெல்லாம் அசராத குணசேகரன், ஜனனி சக்தி வந்ததும் இருக்கு கச்சேரி அதுவரை யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. இனிமேல் தான் என்னுடைய ருத்ர தாண்டவத்தை பார்க்க போகிறீர்கள் என்று ஜெயித்த மமதையில் துள்ளிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் குணசேகரன் அம்மா, ஆதிரையை நான் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினார்.

அதற்கு குணசேகரன் இந்த வீட்டை விட்டு மட்டும் வெளியில போயிட்டா நடக்கிறது வேற என்று தாறுமாறாக பேசி ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டார். மகளின் வாழ்க்கையை நினைத்து துடித்து அழும்போது, இந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அம்மாவுக்கும் வரக்கூடாது என்பது போல் இருந்தது. ஆனாலும் குணசேகரனின் அம்மாவும் இதற்கு முன், வீட்டுக்கு வந்த மருமகளை கொஞ்சநஞ்ச பேச்சா பேசினாங்க.

இதை தான் சொல்லுவாங்க கர்மா என்றைக்கும் செஞ்ச தப்புக்கு சுத்தி சுத்தி அடிக்கும் என்று. அது ஆதிரை மற்றும் குணசேகரனின் அம்மா விஷயத்தில் சரியாக இருக்கிறது. பிறகு ஜனனி மற்றும் சக்தி உள்ளே வந்ததும், குணசேகரன் ஜனனியை தவிர மற்ற எல்லாரும் என்னிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே ஒழுங்கா போயிருங்க. இந்த ஜனனி மட்டும் இந்த வீட்டில் இனிமேல் இருக்க கூடாது என்று சொல்கிறார். ஆனால் ஜனனி தோற்றுப் போய் நின்னாலும் வாய் சவடாலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

பிறகு கதிரும், ஜனனியை அவமானமாக பேசியதால் இதுவரை பொறுத்திருந்த சக்தி வெறிகொண்டு எழுந்து கதிரை அடித்து விடுகிறார். அது மட்டுமில்லாமல் குணசேகரனை பார்த்து நீங்கள் என்ன ஒரு மனுஷ ஜென்மம், கடைசியில் யாருமே இல்லாமல் தன்னந்தனியாக தவிக்க போறீங்க, என்று சொல்லி இதுவரை மனதில் பூட்டி வைத்த ஆதங்கத்தை எல்லாத்தையும் கொட்டி தீர்த்தது போல் குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டு தொங்க விடுகிறார்.