மீண்டும் களத்தில் தீயாய் பாயும் அமீர்.. அடுக்கடுக்காக 4 படங்களில் பிஸியாக இருக்கும் வடசென்னை ராஜன்

Actor and Director Amir: அமீர் எதார்த்தமான படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர். இவர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். கடைசியாக இவர் ஆதி பகவன் என்ற படத்தை எடுத்த பிறகு இயக்குனராக எந்த படத்தையும் எடுப்பதில் ஆர்வம் செலுத்தாமல் போய்விட்டார்.

ஆனால் அவ்வப்போது படங்களில் நடிகராக இவருடைய முகத்தை சினிமாவில் காட்டிக் கொண்டு வருகிறார். அப்படி இவர் நடித்து மக்களிடம் ராஜனாக பிரதிபலித்த படம் தான் வடசென்னை. இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது.

இயக்குனர் மட்டும் இல்லாமல் சிறந்த நடிகர் என்ற முத்திரையை சினிமாவில் பதித்து விட்டார்.
இதன் பிறகு இவர் தொடர்ச்சியாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவாரோ? இனி இவருடைய எதார்த்தமான படங்களை திரையில் பார்க்க முடியாதா என்று ஏங்கி கொண்டிருந்த நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்கியிருக்கிறார்.

அந்த வகையில் இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்தியா மற்றும் சூரி நடித்து வருகிறார்கள். அடுத்ததாக அவன் அப்படித்தான், நிலமெல்லாம் ரத்தம், மற்றும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் போன்ற படங்களை மக்கள் அனைவரும் எப்பொழுது வெளிவரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .

இந்த படங்களில் எல்லாம் அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படி தொடர்ந்து கைவசம் நான்கு படங்களை வைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சினிமாவிற்கு மறுபடியும் களம் இறங்க இருக்கிறார்.

இவருடைய நடிப்பை மறுபடியும் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இவருடைய ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் நடிக்க இருக்கும் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.