Actor Vadivelu: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு முதன்மை கேரக்டரில் நடித்திருக்கும் மாமன்னன் நேற்று வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளிலேயே ஆறு கோடி வரை வசூலை தட்டி தூக்கிய இப்படம் இன்றும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உதயநிதியின் கடைசி படம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள், ட்ரெய்லர் என வடிவேலுவின் மாறுபட்ட பரிமாணமும் பெரும் ஆர்வத்தை தூண்டியது. அதற்கேற்றார் போல் தற்போது படத்தை பார்த்த பலரும் வடிவேலுவின் நடிப்பை சிலாகித்து போய் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி அவர்தான் படத்தின் ஹீரோ என்றும் தேசிய விருதுக்கு தயாராகி விட்டார் என்றும் கருத்துக்கள் கிளம்பியுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் வடிவேலுவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அவருடைய ரீ என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் பார்த்து பலரும் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் மட்டும் தான் அவர் கைவசம் இருந்தது.
அதைத்தொடர்ந்து இவர் அதிகபட்ச சம்பளம் கேட்டதால் பல படங்கள் கைநழுவி போனது. இருப்பினும் வடிவேலு மாமன்னன் ரிலீஸ் ஆகும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம். ஏனென்றால் இந்த படத்தின் கனமான கேரக்டர் ரிலீசுக்கு பிறகு பேசப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தான்.
Also read: மாரி செல்வராஜால் ரணகளமாகும் சோசியல் மீடியா.. உண்மையான மாமன்னன் இவர் தான்
அவருடைய கணக்கு தற்போது பழித்துவிட்ட நிலையில் இவர் தற்போது தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த வடிவேலு அடுத்த படங்களுக்கு 10 கோடி ரூபாய் வேண்டும் என்று செக் வைக்கிறாராம்.
தற்போது அவரை தேடி காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் கனமான கதாபாத்திரங்களும் வருகிறது இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என முடிவு செய்த வடிவேலு தற்போது இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்ற ஒரு கண்டிஷனையும் போட்டு வருகிறார். இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also read: உதயநிதியின் கடைசி படம் கல்லா கட்டியதா.? மாமன்னன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்