மணிரத்னம் பட பிரபலத்தை காதலித்த அகர்வால் நடிகை.. திடீர் மரணத்தால் கேரியரை தொலைத்த நடிகர்

Manirathnam: இயக்குனர் மணிரத்தினம் படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான நடிகர் ஒருவர் இப்போது தன்னுடைய கேரியரை தொலைத்து விட்டு நிற்கிறார். டாப் ஹீரோயினாக இருந்த அகர்வால் நடிகையின் காதல் தான் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்ற செய்தி பகீர் கிளப்பி இருக்கிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நமக்கு பரிச்சயமானவர் தான் தருண். அதைத்தொடர்ந்து ஹீரோவாக தமிழில் புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் தமிழை விட தெலுங்கு பக்கம் தான் இவர் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இருக்கிறார்கள். இப்படி பிசியாக இருந்த இவர் அதே தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த ஆர்த்தி அகர்வாலுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். அதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒரு செய்தியும் அப்போது பரவியது. இந்த ஆர்த்தி அகர்வால் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பம்பர கண்ணாலே படத்திலும் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்த காதல் கிசுகிசு மீடியாவில் வேகமாக பரவியதால் தருண் அதற்கு இல்லை என்று மறுப்பு கூறினார். அதைத்தொடர்ந்து ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி செய்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் படிக்கட்டில் தவறி விழுந்ததால் தான் அவருக்கு அடிபட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு இவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டு வருடங்கள் கூட அந்த திருமண வாழ்வு நீடிக்காமல் விவாகரத்தில் முடிந்தது. இப்படி பல சிக்கல்களுக்குப் பிறகு தன் பெற்றோருடன் வசித்து வந்த ஆர்த்தி கடந்த 2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்

வெறும் 31 வயதில் நடந்த இவருடைய மரணம் பல கேள்விகளுக்கு ஆளானது. ஆனால் அவர் உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொண்ட சிகிச்சை தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதற்கும் தருணை காரணம் காட்டி சில செய்திகள் வெளிவந்தது. அதை தொடர்ந்து அவருக்கான பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. தற்போது தருண் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகிய நிலையில் சொந்த பிசினஸை கவனித்து வருகிறார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு நடிகையால் இவருடைய சினிமா கேரியரே முடிந்து போனது.