திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாதவன் ராசி இல்லாத நடிகர் என்று ஒதுக்கிய 5 நடிகைகள்.. சாக்லேட் பாயாக இருந்தாலும் நோ சொன்ன ஹீரோயின்

Actress Regected Act to Madhavan: நடிகைகள் என்னதான் முதல் படங்களில் நடித்து வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை என்றால் அவர்கள் எளிதாக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். அந்த நேரத்தில் நடிகைகள் ஏற்கனவே நடித்த நடிகர்களுடன் நடிப்பதற்கு மறுத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய ராசி என்பதால் அந்த நடிகரை வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

மீரா ஜாஸ்மின்: இவர் ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஓரளவுக்கு வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனாலும் இவருடைய விளையாட்டுத்தனமான முகமும், ஹீரோயினுக்கான அம்சமும் இவரிடம் குறைவாக காணப்பட்டதால் பெரிதாக வளர முடியவில்லை. இவருடைய முதல் படமான ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து இருந்தாலும் அதில் பிரோஜனம் இல்லாத அளவிற்கு கேரியர் வளராமல் போய்விட்டது.

Also read: முதல் படம் மரண ஹிட், தற்போது காணாமல் போன 6 நடிகைகள்.. கவர்ச்சியால் சினிமாவை வெறுத்த மீரா ஜாஸ்மின்

சதா: இவர் தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைத்து மொழிகளும் கதாநாயகியாக நடித்தார். அத்துடன் முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், அஜித், மாதவன் இவர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அதை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள தந்திரம் இல்லாததால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். அதிலும் மாதவன் கூட சேர்ந்து நடித்த எதிரி என்ற படம் சரியாக ஓடாமல் கலவையான விமர்சனத்தை பெற்று இவருக்கு தோல்வி படமாக அமைந்து விட்டது.

சினேகா: இவர் பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் நடித்து புன்னகை அரசி என்ற பட்டத்துடன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டிருக்கிறார். அதிலும் கமல், அஜித், விஜய், பிரசாந்த் போன்ற அனைத்து நடிகர்களுடன் நடித்து வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் மாதவனுடன் என்னவளே மற்றும் பார்த்தாலே பரவசம் என்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அடுத்த படம் மாதவன் என்று சொன்னாலே அவர் ராசி இல்லாத நடிகர் அதனால் அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

Also read: சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபலங்கள்.. விளம்பரங்களை கொடுத்தே உஷார் செய்த லெஜெண்ட்

அமோகா: இவர் தமிழில் ஜே ஜே என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த முதல் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இதுவே முதலும் கடைசியுமாக முடிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி விட்டு போயிருப்பார். அதோடு இவருடைய தமிழ் சினிமா கேரியரே முடிந்து விட்டது.

ரித்திகா சிங்: இவர் தமிழில் நடித்த முதல் படமே மாதவனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று படத்தில் தான். அதன் பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கம், ஓ மை கடவுளே என்ற படங்களில் நடித்திருக்கிறார். இவரிடம் மறுபடியும் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று பட்டும் படாத மாதிரி இவருக்கு வந்த வாய்ப்பை மறுத்து விட்டார். அதற்குக் காரணம் மாதவன் தற்போது சினிமாவில் அந்த அளவிற்கு இடம்பெறாததால் அவரை ஒதுக்குகிறார்.

Also read: மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்.. இன் கார் பட ப்ரோமோஷனில் கண்கலங்கியதால் பரபரப்பு

Trending News