திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பச்சோந்தி மாதிரி குணத்தை மாற்றும் குணசேகரன்.. மானங்கெட்ட மருமகனுக்கு மாப்பிள்ளை விருந்து

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்த்த ஆதிரை திருமணம் ஏமாற்றமாக முடிந்திருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது. அதிலும் இந்த கல்யாணத்திற்கு பிறகு குணசேகரன் ஜெயித்த மாதிரி இருந்தாலும், உண்மையில் மானம் இல்லாமல் குடும்பத்திற்குள் திரிகிறார்.

அதாவது ஆடிட்டர் சொன்ன வார்த்தைக்காக சக்தியை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன ட்ராமா பண்ணுகிறார். அதிலும் இவர் பேசினால் வரமாட்டான் என்று தெரிந்து வைத்து விட்டு அம்மாவை வைத்து காய் நகர்த்துகிறார். இவர் கூப்பிட்டதும் சக்தி ஜனனியும் வந்து விடுகிறார்கள். உடனே நந்தினி, நீங்க ஏன் இங்க வந்தீங்க கொஞ்சம் கூட மான ரோசமே இல்லையா? என்று கேட்கிறார்.

Also read: சொந்தமா உழைச்சு திங்கிற திராணி எனக்கு இருக்கு.. குணசேகரனின் 40% சேரில் இடியை இறக்கிய ரத்த சொந்தம்

அதற்கு சக்தி என் அம்மா கூப்பிட்ட காரணத்திற்காக தான் வந்தேன் என்று சொல்ல, ஏன் அந்த கிழவி அன்றைக்கு வாய மூடிட்டு சும்மா இருந்துட்டு இப்ப என்ன பாசம் திடீர்னு வந்துடுச்சு அது கூட புரியலையா, இதெல்லாம் உங்க அண்ணன் பண்ணுகிற சதி வேலை. மறுபடி மறுபடியும் அவர்தான் ஜெயித்துக் கொண்டு வருகிறார் என்று சொல்கிறார்.

பிறகு வீட்டிற்குள் போனதும் குணசேகரனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் கண்ணா பின்னா என்று போகிறது. அப்பொழுது குணசேகரன் என்னுடைய சொத்தை நான் உனக்கு எழுதித் தருகிறேன் என்று சொல்ல, அதற்கு சக்தி இவ்வளவு பேசுவாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தாறுமாறாக வார்த்தையால் கிழித்து தொங்க விடுகிறார். இவர் ஒரு பக்கம் பேசியதை விட, ரேணுகா பேசினாங்க பாரு அச்சச்சோ பாக்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Also read: டிஆர்பியில் அதிரடி காட்டும் விஜய் டிவி.. எதிர்நீச்சலால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி

ஆக மொத்தத்தில் குணசேகரன் குடும்பத்திற்குள் மானம் மரியாதை இல்லாமல் தான் திரிகிறார். இவருடைய நோக்கமே அந்த 40% சொத்துதான். அதற்காக எந்த மாதிரி மட்டமான வேலையும் இறங்கி செய்யவும் தயங்க மாட்டார். கொஞ்சம் விட்டா சொத்துக்காக எல்லாரும் காலில் விழுந்து கெஞ்சியாவது சொத்த புடிங்கிருவாரு போல.

இவரை பார்க்கும் பொழுது பச்சோந்தி தான் ஞாபகத்துக்கு வருகிறது. நேரத்துக்கு நேரம் குணத்தை மாற்றிக் கொண்டு பிழைக்கும் இந்த பொழப்பு தேவையா? இதுல வேற மானங்கெட்ட மருமகனுக்கு மாப்பிள்ளை விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. குணசேகரனுக்கு ஏத்த மட்டமான சம்பந்தம் தான் ஜான்சி ராணி. ஆனா கடைசில குணசேகரன் கண்ணில் விரலை விட்ட ஆட்டக்கூடிய ஆளு இவராகத்தான் இருக்கப் போகிறார்.

Also read: தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!

Trending News