வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 படங்களில் நடித்த மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு.. கவர்ச்சிக்காகவே கல்லா கட்டிய நடிகை

Actress mumtaj: தன்னுடைய 19 வயதில் டி ராஜேந்தர் கொடுத்த வாய்ப்பின் மூலம் ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகை மும்தாஜ். இதன்பிறகு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழிப் படங்களிலும் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கலக்கியவர். இவர் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் செம ஹாட் ஆனா மும்தாஜ் இளசுகளை உசுப்பேற்றி விடும் அளவுக்கு நிறைய ஐட்டம் பாடல்களில் ஆடி குஷி படுத்தியவர். அதிலும் பிரசாந்துடன் இணைந்து ஸ்டார் படத்தில் இடம்பெற்ற ‘மச்சினியே மச்சான் மச்சினியே’, சாக்லேட் படத்தில் இடம்பெற்ற ‘மலை மலை மருதமலை’, குஷி படத்தில் விஜய்யுடன் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ போன்ற பாடல்களில் இவர் ஆடிய கவர்ச்சி ஆட்டம் ஏகப்பட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

Also Read: மோனல் மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்.. சிம்ரனின் சந்தேகத்தில் சிக்கும் ‘பத்ரி’ பட நடிகர்

இவர் தன்னுடைய 19 வயது முதல் சினிமாவில் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த சொத்து விவரம் எவ்வளவு என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சிறு வயதில் இருந்து சினிமாவின் மீது அதிக ஈடுபாடு கொண்ட மும்தாஜ், தன்னுடைய அறை முழுவதும் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக்கொண்டு எப்போதுமே தன்னை ஒரு கதாநாயகியாகவே கனவு உலகில் வாழ்ந்து வந்தவர்.

மும்பையிலேயே பிறந்து வளர்ந்த மும்தாஜ், பள்ளிக்கு செல்லும் போதும் கூட நடிகர் நடிகைகளை யாரையாவது பார்க்க மாட்டோமா! என வலை வீசி தேடுவாராம். அந்த ஆர்வம் தான் அவரை சினிமாவில் கொண்டு வந்து சேர்த்தது. முதலில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த மும்தாஜ், அதன் பிறகு சத்யராஜ் உடன் மலபார் போலீஸ், விஜய்யின் குஷி, பிரபுவின் பட்ஜெட் பத்மநாதன் போன்ற படங்களில் அவரை ஒரு ஐட்டம் நடிகையாக காட்டி செம பேமஸ் ஆனார்.

Also Read: 50 வயசு ஆகியும் கல்யாணம் ஆகாத 6 நடிகைகள்.. ஜோதிகாவின் குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை

இவர் கடைசியாக பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு, சுத்தத்தைப் பற்றி பேசி பெரிய ரகளையையே செய்து விட்டார். சுமார் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பின் வெளியேறினார். அதன் பிறகு தற்போது மும்தாஜ் எந்தவித சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தற்போதைய நிலையில் இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 22 கோடி பெரும்.

இவருக்கு இன்னும் சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறது. ஆனால் அவர் எதிர்பார்த்த கேரக்டர் அமையாததால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்துடன் சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருடைய பிறந்தநாளான இன்று அவருடைய ரசிகர்களும் இவரைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களையும், அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் மறவாமல் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

Also Read: எந்த இலாக்காவையும் விட்டு வைக்காத டி ராஜேந்திரரின் 5 படங்கள்.. வீராச்சாமியாய் மும்தாஜ் உடன் செஞ்ச ரவுஸ்

Trending News