Comedian Amudhavan: அமுதவாணன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு பெற்று, அதன் பின் சினிமாவிலும் காமெடியனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அவ்வாறு இருக்க, இவரின் மீசையை எடுக்க சொன்ன இயக்குனர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.
பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலாவை அணுகி உள்ளார். அதன்பின் கிடைத்த வாய்ப்பு தான் 2016ல் வெளிவந்த தாரை தப்பட்டை. இப்படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக, இவரின் நடனம் பெரிதளவு பேசப்பட்டது. அவ்வாறு இருக்க இந்த வாய்ப்பினை பெற்ற சம்பவத்தை தற்பொழுது இன்டர்வியூ ஒன்றில் பதிந்துள்ளார்.
மேலும் இயக்குனர் பாலா தன்னை சூர்யாவை போல் மிமிக்கிரி செய்ய சொன்னதாகவும், அதை தொடர்ந்து அவரின் அப்பாவான சிவக்குமாரை போலவும் பேச சொன்னாராம். அவ்வாறு முதல் முதலில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதால் இயக்குனரை கண்டு பயத்தில் இருந்ததாகவும் தன் அனுபவத்தை கூறினார்.
அதன்பின் தன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பாலா, தான் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கூறினாராம். அப்படத்தின் படப்பிடிப்பின் போது முகத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அமுதவாணனை பார்த்து முதலில் மீசையை எடுத்துரு என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அக்கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் தலைமுடியையும் மாற்றி விட்டதாக கூறினார். முதலில் இதையெல்லாம் ஏற்க கடினமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய இயக்குனர் இடம் வாய்ப்பு பெறுவது சுலபமில்லை என எண்ணி, கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதாக கூறினார் அமுதவாணன்.
மேலும் இப்படத்தில் கிடைத்த விமர்சனத்தை கொண்டே தனக்கு அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார். இயக்குனர் பாலாவை பார்த்தால் கடுமையாக நடந்து கொள்வது போல இருக்கும், ஆனால் அவர் தன் பணியின் பொறுப்பாக இருப்பதாகவும், மேலும் தன் நடிப்பினை கண்டு அவரே புகழ்ந்ததாகவும் கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார் அமுதவாணன்.