Actor Surya – Arun Vijay: நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்த காலத்திலேயே சினிமாவுக்குள் நுழைந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததே தவிர ஒரு வெற்றி ஹீரோ என்ற அடையாளம் என்பது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அருண் விஜய் தன்னுடைய சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களிடையே முதன்முதலாக அவருக்கு இந்த விக்டர் கதாபாத்திரம் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.
Also Read:பாலாவின் காலில் விழுந்த பாலிவுட் நடிகை.. வட இந்தியாவில் நடந்த சம்பவம்
இதன் பின்னர் அருண் விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இருந்தாலும் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை. விக்டர் என்ற ஒரு கேரக்டரின் வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்டவும் முடியாது. இதனால் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட வேண்டும் ரொம்பவும் போராடிக் கொண்டிருக்கிறார் இவர். நல்ல நடிப்பு திறமை இருந்தும், முன்னணி ஹீரோக்களுக்கு இணையான உடல்வாகு இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் இவருக்கு வெற்றி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.
இப்படி இவர் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் சூர்யா எடுத்த முடிவு, இவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. நந்தா மற்றும் பிதாமகன் போன்று மிகப்பெரிய வெற்றி படங்களை சூர்யாவுக்கு கொடுத்த இயக்குனர் பாலா உடன் சூர்யா வணங்கான் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே, எந்த காரணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
Also Read:2000, 1500னு காதில் பூ சுத்திய படக்குழு.. கங்குவாவில் மொத்தம் ஆடியதே இத்தனை பேருதான்
சூர்யா விலகிய நிலையில் அந்த வாய்ப்பு அருண் விஜய்க்கு ஜாக்பாட் போல் அடித்தது. அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாலாவை பொறுத்த வரைக்கும் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு கால தாமதம் ஆனாலும், அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் மற்றும் அந்த நடிகர்களின் நடிப்பு திறமையும் பெரிய அளவில் பேசப்படும். இதை புரிந்து கொண்ட அருண் விஜய் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த படம் வெற்றி அல்லது தோல்வி என்பதை தாண்டி படத்தில் அருண் விஜய்க்கு நடிப்பதற்கு என்று நிறைய வாய்ப்புகள் இருக்கும். எனவே இதன் பிறகு அவருடைய நடிப்பு திறமைக்காகவே அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகள் அமையவும் வாய்ப்பு இருக்கிறது. வணங்கான் படத்திலிருந்து விலக சூர்யா எடுத்த முடிவு தற்போது அருண் விஜய்க்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
Also Read:கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா