திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பட வாய்ப்புக்காக நாய்க்குட்டியை தூக்கிட்டு நாலு நாள் அலைந்து திரிந்த எஸ் ஜே சூர்யா.. சுக்கு நூறாக உடைந்து போன அஜித்

Director S J Suriya: தன் திறமைக்கான அடையாளத்தை பெற்று மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் அஜித்குமார். அவ்வாறு இருக்க, இவரை சுக்கு நூறாய் உடைக்க வைத்த சம்பவம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

மேலும் பன்முகத் திறமையால் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர் மற்றும் நடிகர் தான் எஸ் ஜே சூர்யா. தன் திறமைக்கேற்ற வாய்ப்பு தேடி அலைந்த இவர் வசந்த் மற்றும் சபாபதி ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் படங்களிலும் சின்ன கதாபாத்திரம் ஏற்று தலை காட்டி வந்தார்.

Also Read: பட வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்தணும் என நிரூபித்த 6 நடிகர்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக வரும் கவின்

அவ்வாறு இருக்க வசந்த் இயக்கத்தில் அஜித் மற்றும் சுவலட்சுமி இணைந்து நடித்த மாபெரும் வெற்றி தந்த படம் தான் ஆசை. இப்படத்தில் தன் காதலியான சுவலட்சுமிக்கு, அஜித் நாய்க்குட்டி ஒன்றை பரிசளிப்பதாக காட்சி இடம் பெறும். இக்காட்சிக்காக நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு செல்வதாக இருந்தது.

அந்நிலையில் அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்த எஸ் ஜே சூர்யாவிடம் பணத்தை கொடுத்து நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறு கூறப்பட்டதாம். அதை கேட்ட உடனே மறுக்காது நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த பாத்திரக்கடையில் வாலி ஒன்றையும், மேலும் நாய்க்குட்டிக்கு பாலையும் வாங்கிக் கொண்டு ரயில்வே நிலையம் சென்று விட்டாராம்.

Also Read:விஜய்யால் குடியை மறந்த வெங்கட் பிரபு.. விக்னேஷ் சிவன் போல் தூக்கி எறிந்து விடுவார் என்ற பயம்.!

மேலும் ரிசர்வேஷன் இல்லாது இரண்டு பகல் 2 இரவு கழித்து டெல்லி சென்று நாய்க்குட்டியை ஒப்படைத்தாராம். அதன் பின்னால் அப்படைப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். அவ்வாறு தனக்கு கொடுத்த வேலையை வேலையாக மட்டுமே பார்த்து தன் டெடிகேசனை கொடுத்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

இவரின் டெடிகேஷன் தான் இன்று வரை தோல்வியடைந்தாலும் திரும்பவும் கொண்டுவர காரணமாக இருந்து வருகிறது. மேலும் இவரின் செயலை கண்டு சுக்கு நூறாய் உடைந்து போன அஜித், இவரின் படங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து 1999ல் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படம் தான் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

Trending News