Actor Dhanush: பொதுவாக நாம் நினைத்த விஷயங்கள் அனைத்தையும் உடனே செய்து காட்டிட முடியாது. அதுவும் சின்ன வயதில் ஆசைப்பட்ட விஷயங்கள் பலருக்கும் நிராசையாக போய் இருக்கிறது. ஆனால் அதை மனதில் வைத்துக் கொண்டு அதற்காக நாம் முழு முயற்சியுடன் இறங்கினால் எல்லாமே சாத்தியமாகும் என்பதற்கு உதாரணம் தனுஷ்.
அதாவது இவருடைய அப்பா கஸ்தூரிராஜா சினிமாவிற்குள் வரும் முன் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தனுஷ் சிறு வயதாக இருக்கும் போது பக்கத்து வீட்டு பையன் காஸ்ட்லி ரிமோட் கார் வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை ஏக்கத்துடன் பார்த்து அதே மாதிரி விளையாடனும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
Also read: விவாகரத்து கற்றுக் கொடுத்த பாடம்.. ஞானியாய் மாறி ரஜினி பாதையில் செல்லும் தனுஷ்
அப்பொழுது அந்தப் பையனிடம் போய் எனக்கும் ஆசையாக இருக்கு ஒருமுறை தருகிறாயா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பையன் தர முடியாது என்று மறுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த அப்பாவிடம் தனுஷ் எனக்கும் இதே மாதிரி ரிமோட் கார் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து இருக்கிறார்.
அதற்கு அவருடைய அப்பா இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி என்னால வாங்கி தர முடியாது என்று சொல்லி மறுத்து இருக்கிறார். இந்த ஒரு விஷயம் தனுஷ் மனதை ரொம்ப பாதித்ததால் தன் வாழ்நாளில் எப்படியாவது இதேபோன்று ஒரு காஸ்ட்லி காரை வாங்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வளர்ந்து வந்த தனுஷ் அவருடைய சின்ன வயசு நிராசையை நிறைவேற்றி விட்டார். அதாவது இந்தியாவிலேயே நம்பர் ஒன் காஸ்ட்லி காரை வாங்கி அவருடைய வீட்டுக்கு முன்னாடி நிறுத்தி வைத்து அழகு பார்த்து வருகிறார். ஆனால் இது வெறும் ஷோகேஸ் ஆக தான் அவருடைய வீட்டில் இருக்கிறது.
அதற்கு காரணம் இந்த காரை இந்திய சாலையில் ஓட்டுவது மிகவும் கடினம். அது மட்டுமல்லாமல் 500 மீட்டர் செல்வதற்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுமாம். அதன் காரணமாக இந்த காரை வாங்கி அவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். என்னதான் ஆசை நிறைவேற்றினாலும் அதை ஓட்ட முடியாமல் தான் இருக்கிறார். இதைத்தான் சொல்வாங்க கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போகுது என்று.
Also read: ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்த போகும் தனுஷ்.. மாசாக வந்துள்ள 50வது பட அப்டேட்