Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தப் படம் தான் விஜய்யின் கடைசி படம் என்றும், இந்த படத்திற்கு பிறகு மூன்று வருடம் அரசியலில் தளபதி தீவிரமாக இறங்கி செயல்பட போவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுமா? என திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
Also Read: சினிமா ஆசையை விட்டுவிட்டு ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் விஜய்.. சீக்ரட்டாய் நடக்கும் ஒத்திகை
அதற்கு அவர் ஷாக்கிங் ரிப்போர்ட்டை கொடுத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் கோலிவுட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஜய் அரசியலுக்கு சென்றால் அவருடைய படங்கள் வராது என்பதால் தமிழ் சினிமாவிற்கு எந்த இழப்பும் நேர்ந்திடாது. அவர் இல்லை என்றால் வேறொரு நடிகர் உருவெடுப்பார்
முன்பு தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா இருவரும் களத்தில் போட்டி போட்டனர். அவர்களுக்குப் பின் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியானது. பின்பு கமல், ரஜினி இருவரும் திரையில் மோதிக்கொண்டனர். இப்போது விஜய், அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது நடிகர்கள் உருவாகத்தான் போகிறார்கள். ஆகையால் ஒருவர் சினிமாவை விட்டு போகப் போகிறார் என்றால் உடனே சினிமா அழிந்து போவதில்லை.
Also Read: மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்
விஜய் அரசியலுக்கு செல்வதே தற்போது யூகிக்கப்பட்ட விஷயம் ஒன்றுதானே தவிர, அதை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அதை அவர் அறிவித்து, அரசியலுக்கு சென்றாலும் இதில் யாரும் கருத்து சொல்ல முடியாது. இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அவர் சினிமாவை விட்டு சென்றால், இன்னும் இளம் நடிகர்கள் வர தான் போகிறார்கள். சினிமாவிற்கு எந்த பங்கமும் ஏற்படாது.
ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தற்போது உச்ச நாயகனாக இருக்கும் விஜய்யின் படங்கள் இனி திரையரங்கில் வராது என்றால் அது தியேட்டர்களுக்கு இழப்புதான். இருந்தாலும் அதை வேறு பிற நடிகர்களின் படங்களை வைத்து சமாளித்து விடுவோம் என்று சமீபத்திய பேட்டியில் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.