ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தமிழ்நாட்டுல நா பெரிய ஆளு அவருக்கெல்லாம் கால் அழுத்த முடியாது.. வடிவேலு தூக்கி எறிந்த ஹிட் பட வாய்ப்பு

Comedian vadivelu: தன் திறமைக்கேற்ற வாய்ப்பை தக்கவைத்து, தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக இன்றும் பேசப்படுபவர் தான் வைகை புயல் வடிவேலு. அவ்வாறு இருக்க, இவர் நிராகரித்த படம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

கவுண்டமணி-செந்திலுக்கு நிகராய் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்தவர் வடிவேலு. ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்க பெரும் சிரமத்தை சந்தித்த இவர் தற்பொழுது செய்து வரும் காரியம் இவரா இப்படி என வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: விஜய் சினிமாவை விட்டு விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

தான் கடந்து வந்த பாதையை சற்றும் மறவாமல் இருப்பவர்கள் வேற ரகம். ஆனால் இவர் அடைந்த புகழ், இவரை தலைகால் புரியாத அளவிற்கு செய்து வருகிறது. தற்பொழுது எங்கு திரும்பினாலும் இவரின் பேச்சு தான், படத்தில் ரி என்ட்ரி கொடுத்தாரோ இல்லையோ, மக்களால் நன்கு சாடப்பட்டு வருகிறார்.

அதற்கு உதாரணமாக இவர் சக நடிகர்களிடையே கெத்து காட்டிய சம்பவம் மேலும் அவர்களை அறவே வாழ விடாமல் செய்தது போன்ற பல சர்ச்சைக்கு ஆளாகினார். அதைத்தொடர்ந்து இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது முன்வந்து இவரின் குணத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Also Read: அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினி.. பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ஆடியோ லான்ச்

அவ்வாறு 2009ல் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் படிக்காதவன் இப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக்கு வடிவேலுவை தான் நடிக்க வைத்தார்களாம். மேலும் அதில் சமரசசிம்ஹா ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுமன். இவரின் காலை அழுத்தும் சீனில் நடிக்க சொன்ன போது வடிவேலு என்னால முடியாது தமிழ்நாட்டுல நான் எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் தெரியுமா? நான் போய் அவர் காலை எல்லாம் அழுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு பேக்கப் செய்து உள்ளார்.

அவ்வாறு இமேஜ் பார்த்து அவர் 12 நாள் ஷூட்டிங் நடைபெற்றதை பொருட்படுத்தாது, கெத்து காட்டி அப்பட வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். அதைத்தொடர்ந்தே அக்கதாபாத்திரத்தை விவேக் ஏற்று நடித்தாராம். இருப்பினும் தனுஷ் மற்றும் விவேக் கூட்டணியில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. அவ்வாறு தன் தலை கர்வத்தால் இவர் நிராகரித்த படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: போண்டாமணியையும், போனிகபூரையும் மறந்துவிட்ட லோகேஷ்.. லியோ படத்தை கலாய்த்து தள்ளும் பிரபலம்

Trending News