Actor Vijay and Rajini: விஜய் நடிகராக சினிமாவிற்கு கொடுக்கும் பங்களிப்பையும் தாண்டி தற்போது சமூக சேவையும் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். அதாவது எப்படி ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தாரோ அதே மாதிரி நிஜத்திலும் நல்ல விஷயங்களை செய்து மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்.
அதற்காக பல நலத்திட்டங்களை இவருடைய ரசிகர் மன்றம் மூலமாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் கோடை காலத்தில் தண்ணீர் தாகத்தை தீர்த்து வைக்கும் பொருட்டாக ஆங்காங்கே தண்ணீர் பந்தல் வைப்பது, அத்துடன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார்.
மேலும் விஜய்யின் பிறந்தநாள் அன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை நேரில் சந்தித்து நிதி மற்றும் பரிசுகளை கொடுத்து ஊக்குவித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்து வரும் இவர் தற்போது அனைவரும் மனதிலும் நிஜ ஹீரோவாக இடம் பிடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்னும் மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்ய இருக்கிறார். அதனால் தான் சினிமாவிற்கு மூன்று வருடங்கள் பிரேக் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய அரசியலுக்கும் அஸ்திவாரம் போட இருக்கிறார் என்ற செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் 2015 இல் இருந்தே விஜய் இதையே தான் சொல்லி வருகிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இவருடைய சுய ரூபத்தை புட்டு புட்டு வைக்கிறார். அதாவது அரசியலுக்கு வருகிறேன் என்று ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு அவர்களின் அனைவரது கவனத்தையும் இவர் பக்கம் திருப்புவதற்காக தான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் என்று கூறி இருக்கிறார்கள்.
இப்படித்தான் இவரை போல ரஜினி நீண்ட காலமாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி மக்களை உச்சகட்ட பரபரப்பிலே வைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் இவருடைய ரசிகர்களும் ஆவலாக தலைவர் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சட்டென்று எனக்கும் அரசியலுக்கும் ஒத்து வராது என்று சொல்லி அரசியலுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டார். அதே போல தான் விஜய்யின் கதையும் ஆகப்போகுது என்று சொல்கிறார்கள்.