திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெயரே தெரியாமல் அழகில் மயக்கும் 5 ஆன்ட்டிகள்.. கமல் செய்த சூழ்ச்சியை சுக்கு நூறாக்கிய ஆஷா சரத்

Five Actress Only Face Knowing: சினிமாவில் சில நடிகைகளின் முகம் நன்கு தெரிந்தாலும் அவர்களின் பெயர் நமக்கு தெரிவதில்லை. ஆனாலும் நடிகைகளின் முகம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்ததால் அந்த நடிகைகள் நம்மை கவர்ந்திருப்பார்கள். அப்படி பெயர் தெரியாமல் அழகில் மயங்க வைத்த ஐந்து நடிகைகளை இப்போது பார்க்கலாம்.

சுரேகா வாணி : தெலுங்கில் முன்னணி நடிகை ஆக இருந்த சுரேகா ராணி தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கமலின் உத்தமபுத்திரன் படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.

surekha-vani
surekha-vani

Also Read : நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்

மாளவிகா அவினாஷ் : சின்னத்திரை தொடர்களில் மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் மாளவிகா அவினாஷ். இவர் ஜே ஜே, ஆறு, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சின்னத்திரை தொடர்களான அண்ணி, செல்லமே ஆகிய தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

malavika- avinash
malavika- avinash

பவித்ரா லோகேஷ் : கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் கௌரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் ஆர் ஜே பாலாஜியின் வீட்டில விசேஷம் படத்தில் சௌமியாவின் அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்திருந்தார்.

pavithra-lokesh
pavithra-lokesh

Also Read : சிம்புவின் சவடாலாம் கமல் கிட்ட செல்லாது.. பூதாகரமாய் மாறிய சம்பவம்

ஆஷா சரத் : மலையாள மொழி படங்களில் அதிகம் நடித்தவர் ஆஷா சரத். இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர். ஆஷா சரத் தமிழில் வெளியான பாபநாசம் படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் கமலின் சூழ்ச்சிகளை தவிடுபொடி ஆக்கி இருப்பார்.

asha-sharath
asha-sharath

வினோதினி வைத்தியநாதன் : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். இவர் எங்கேயும் எப்போதும், ஜிகர்தண்டா, வேலைக்காரன், ராட்சசன், கோமாளி, பொன்னியின் செல்வன் போன்ற பல நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பரிச்சயமானவராக இருந்தாலும் இவரது பெயர் பலருக்கும் தெரியாது.

vinodhini
vinodhini

Also Read : பிக் பாஸ் ஓட அழிந்து போன புகழ்.. வெறும் பேச்சுவார்த்தையோட கமல் பேக்கப் பண்ணிய 6 பிரபலங்கள்

Trending News