Director Bharathiraja: கிராமத்து மண்வாசனையை படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டி எடுக்கக்கூடிய திறமையான இயக்குனர் பாரதிராஜா தான். இவரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்த பலரும் தான் தற்போது இயக்குனர்களாக இருக்கிறார்கள். அத்துடன் பல புதுப்புது நடிகர், நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனரும் இவர்தான்.
அப்படிப்பட்ட இவரிடம் இருந்து சாதித்து வெற்றி பெற்ற பலருக்கும் இவர்தான் தூணாக இருந்து இயக்குனர் இமயம் என்று கொடிகட்டி பறந்திருக்கிறார். இவரை கடவுளாக பார்க்கும் பல பேர் சினிமாவில் இருக்கிறார்கள். அத்துடன் இவர்களால் தான் எங்களுடைய சினிமா வாழ்க்கை பிரகாசம் ஆகி இருக்கிறது என்று பார்க்கும் பொழுதெல்லாம் இவரைப் பற்றி புகழாரம் சூடி கொள்வார்கள்.
அப்பேற்பட்ட பாரதிராஜாவிடம் திமிர்த்தனமாய் வாய்ப்பு கேட்டிருக்கிறார் மிகப்பெரிய பிரபலம். அதாவது ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு முடிந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஒத்த வார்த்தையில் சொல்லிவிட்டு அந்த பிரபலம் அப்படியே கிளம்பி விட்டாராம்.
என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த இவருக்கு இவ்வளவு திமிரா என்று யோசித்தபடியே அந்த புத்தகத்தை பாரதிராஜா திருப்பி பார்த்திருக்கிறார். அப்படியே போகப் போக படித்து பார்க்கையில் அவருடைய கண்களில் இவரை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டதாம். அந்த அளவுக்கு கவிதைகள் நிறைந்த வரிகள் அனைத்தும் சிற்பமாக செதுக்கி எழுதி இருந்திருக்கிறார்.
அந்த கவிஞர் வேறு யாருமில்லை தற்போது பெரிய பெரிய யானைகளை கவர்ந்த வைரமுத்து தான். இவருடைய புத்தகங்களை படித்த பின்பு பாரதிராஜா இவரை அழைத்து இளையராஜாவிடம் உடனே கூப்பிட்டு போய்விட்டார். அப்பொழுது இளையராஜாவிடம் இவர்தான் புதுப்பையன் என்று அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அதற்கு இளையராஜா நீங்கள் எழுதின கவிதைக்கு டியூன் போட்டு எடுத்து வாருங்கள் என்று வைரமுத்துவை அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பின் அவர் டியூன் போட்டு வெளிவந்த பாடல் தான் “இது ஒரு பொன் மாலை பொழுது” என்ற பாடல். இந்தப் பாடலை கேட்ட பிறகு அப்படியே இளையராஜா மிரண்டு விட்டாராம். அதன் பின் தொடர்ந்து இவருடைய வரிகளுக்குஅவர்கள் மட்டுமல்லாமல் நாமும் அடிமையாகி விட்டோம்.