ரஜினியை மிரள வைத்த காமெடி நடிகர்.. இவரைப் போய் மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படும் சூப்பர் ஸ்டார்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தும் தற்போது பழைய எனர்ஜியுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதாவது சமீபத்தில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் வெளியாகி இணையத்தையே ஆட்டிப்படைத்த வருகிறது. அந்த அளவுக்கு அனிருத் இசை தமன்னாவின் நடனம் மற்றும் ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ஒரு காமெடி நடிகரை பார்த்து ரஜினி மிரண்டு போய்விட்டாராம். அவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று வியந்து பார்த்த சூப்பர் ஸ்டார் இவ்வளவு நாட்களாக தனது படத்தில் நடிக்கவில்லையே. இப்படிப்பட்ட ஒரு நபரை மிஸ் செய்து விட்டோம் என வருத்தப்பட்டு இருக்கிறார் என்றால் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட பிளான்.. சம்பந்தமில்லாமல் தமன்னா பாட்டை வெளியிட்ட காரணம்.!

அதாவது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனக்கான தனித்துவமான நடிப்பின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிடுவார் தம்பி ராமையா. அதுவும் கும்கி, மைனா போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் நின்று பேசும் அளவிற்கு இருக்கும். அப்படி ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.

இந்நிலையில் தம்பி ராமையாவுக்கு ஒருமுறை கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லையாம். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் தான் முதல் முறையாக ரஜினியுடன் தம்பி ராமையா இணைந்துள்ளார்.

Also Read : கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லும் விஜய்.. முழுக்க முழுக்க இது ரஜினியின் கதை

இந்நிலையில் ரஜினிக்கு உள்ள அனுபவத்தின் காரணமாக நிறைய சொற்பொழிவுகள் ஆற்றி உள்ளார். அவருக்கே தெரியாத பல விஷயங்களை தம்பி ராமையா கூறியிருக்கிறார். அதாவது சினிமா மற்றும் ஆன்மீகம் போன்றவற்றில் அனைத்தையும் கரைத்துக் குடித்து உள்ளார் தம்பி ராமையா.

அவர் பேசுவதை கேட்டு அப்படியே மெய் மறந்து அசந்து போய் விட்டாராம் ரஜினி. மேலும் அவருடைய நல்ல விஷயங்கள் மற்றும் தகவல்களை பார்த்து பெரிய மனிதராக ரஜினி பாவித்து வருகிறாராம். அதுமட்டுமின்றி இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று தம்பி ராமையாவை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படும்படியாக இருக்கிறார்.

Also Read : நட்புக்காக கேஜிஎஃப் ஹீரோ செய்யும் வேலை.. ரஜினியை கௌரவ படுத்தியவர்களுக்கு யாஷ் செய்த நன்றி கடன்