புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

வசமாய் சிக்கிய கண்ணன்.. ஐஸ்வர்யா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா, இது தேவைதான்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்பொழுது இந்த சீன் வரும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கண்குளிராக பார்த்து ரசிக்கும் படியான எபிசோடுகள் வரக் காத்திருக்கிறது. அதாவது புருஷன் கை நிறைய சம்பாதிக்கிறான் என்ற திமிரில் ஐஸ்வர்யா தனிக்குடித்தனம் கூட்டிட்டு போனார்.

அங்க போய் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஊதாரித்தனமாக பணத்தை தண்ணியாக வாரி இறைத்தார். பிறகு கடனாளியாகி அண்ணன் குடும்பத்துடைய வந்து ஒட்டிக் கொண்டார்கள். ஆனால் வளைகாப்புக்காக வாங்கிய கடனை அடைக்க வேறு வழியில்லாமல் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

Also read: பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

அதற்காக கண்ணன் பேங்கில் லஞ்சம் வாங்கி வந்தார். அது தொடர்ந்து கொண்டே போகையில் இது மேனேஜருக்கு தெரிய வந்த சூழ்நிலையில், கண்ணனுக்கு சரியான ஆப்பு வைக்க வேண்டும் என்று சூழ்ச்சி போட்டு சிக்க வைத்து விட்டார். அதாவது கண்ணன் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபடவில்லை.

ஆனால் இவனை மாட்டி விட வேண்டும் என்பதற்காக மேனேஜர் கண்ணனுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்துவிட்டு போலீசுக்கு தகவலை கொடுத்து விடுகிறார். பிறகு போலீஸ் வந்து செக் பண்ணி அந்த பணத்தை எடுத்து விட்டு கண்ணனை பிடித்து விடுகிறார்கள்.

Also read: வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

ஆனால் கண்ணன் இந்த பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். இப்பொழுது வேண்டுமென்றால் இவன் லஞ்சம் வாங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் இதற்கு முன்னால் வாங்கிக் கொண்டு தானே இருந்தார். தப்பு செஞ்சா தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

இந்த விஷயத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் டிவியின் மூலம் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு இது ஷாக்கிங் ஆக இருந்தாலும் பார்க்கிற நமக்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கிறது. இதற்குத்தான் நாங்கள் ரொம்ப நாளாகவே ஆசைப்பட்டு கொண்டிருந்தோம். இந்த நாடகம் முடியும் தருவாயில் இருப்பதால் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பித்து வருகிறார்கள்.

Also read: ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

- Advertisement -spot_img

Trending News